பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 119
“யெகோவாவுடைய சட்டங்களின்படி நடங்கள்”
யெகோவாவுடைய சட்டங்களின்படி நடப்பது என்றால் அவர் சொல்கிற விஷயங்களுக்கு முழு மனதோடு கீழ்ப்படிவதைக் குறிக்கிறது. சங்கீதக்காரன் போல, அவரது சட்டங்களின்படி நடந்து அவரையே முழுமையாக நம்பியிருந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது.
யெகோவாவுடைய சட்டங்களின்படி நடப்பதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது
யெகோவா சொன்ன விஷயங்களில் யோசுவாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது. வாழ்க்கையில் வெற்றி பெறவும் சந்தோஷமாக இருக்கவும், யெகோவாவை முழு இதயத்தோடு நம்ப வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
பிரச்சினைகளை சமாளிக்க கடவுளுடைய வார்த்தை நமக்கு தைரியத்தை கொடுக்கிறது
கஷ்டங்கள் வந்தாலும் எரேமியா தைரியமாக இருந்தார், யெகோவாவையே நம்பியிருந்தார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். யெகோவா கொடுத்த வேலையை தொடர்ந்து செய்தார்.
கடவுளுடைய வார்த்தையை நன்றாக தெரிந்து வைத்திருந்தால் நம்மால் தைரியமாக பிரசங்கிக்க முடியும்
நற்செய்தியை மற்றவர்களிடம் சொல்ல பவுல் பயப்படவே இல்லை. ஆளுநர் பேலிக்ஸிடம் தைரியமாக பிரசங்கிக்க யெகோவா உதவி செய்வார் என்ற முழு நம்பிக்கை அவருக்கு இருந்தது.
எந்தெந்த சூழ்நிலையில் பிரசங்கிக்கும்போது எனக்கு தைரியம் தேவை?
பள்ளியில்
வேலை செய்யும் இடத்தில்
குடும்பத்தில்
வேறு இடங்களில்