பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 142-150
“யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்”
யெகோவாவின் மகத்துவத்துக்கு எல்லையே இல்லை என்பதை தாவீது புரிந்துகொண்டார், அதனால் அவரை என்றென்றும் புகழ ஆசைப்பட்டார்
தாவீதைப் போல, யெகோவாவின் மகத்தான செயல்களைப் பற்றி அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் எப்போதும் பேசுகிறார்கள்
தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையும் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதற்கான திறமையும் யெகோவாவுக்கு இருக்கிறது என்று தாவீது உறுதியாக நம்பினார்