பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 27–31
திறமைசாலியான மனைவியை பற்றி பைபிள் சொல்கிறது
லேமுவேல் ராஜாவின் அம்மா கொடுத்த அருமையான ஆலோசனைகள் நீதிமொழிகள் 31-ம் அதிகாரத்தில் இருக்கிறது. ஒரு திறமைசாலியான மனைவிக்கு என்னென்ன குணங்கள் இருக்கு வேண்டும் என்பதை தன்னுடைய அம்மா கொடுத்த ஆலோசனைகளில் இருந்து லேமுவேல் தெரிந்துகொண்டார்.
திறமைசாலியான மனைவி நம்பகமானவள்
குடும்ப விஷயங்களில் தீர்மானங்கள் எடுக்க கணவனுக்கு நல்ல யோசனைகளை சொல்லுவாள். அதே சமயத்தில் கணவனுக்கு கட்டுப்பட்டும் நடப்பாள்
அவள் சரியான தீர்மானங்கள் எடுப்பாள் என்று அவளுடைய கணவர் நம்புவார். அதனால், சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்
திறமைசாலியான மனைவி கடினமாக உழைப்பவள்
அவள் சிக்கனமாக செலவு செய்வதால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கண்ணியமான உடையையும் தேவையான உணவையும் கொடுக்க முடிகிறது
தன்னுடைய குடும்பத்தை கவனித்துக்கொள்ள இராப்பகலாக உழைக்கிறாள்
திறமைசாலியான மனைவி கடவுள்பக்தி உள்ளவள்
அவள் கடவுளுக்கு பயந்து நடக்கிறாள். கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்கிறாள்