பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 34–37
எசேக்கியாவின் விசுவாசத்துக்கு பலன் கிடைத்தது
எருசலேமில் இருக்கும் மக்களைச் சரணடைய சொல்வதற்காக அசீரிய ராஜா சனகெரிப், ரப்சாக்கேயை அனுப்பினார். யூதர்கள் போர் செய்யாமலேயே தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அசீரியர்கள் நினைத்தார்கள். அதற்கு, யூதர்களிடம் பின்வரும் விஷயங்களைச் சொன்னார்கள்.
உதவி கிடைக்காது. நீங்கள் எகிப்தை நம்புவது வீண்.—ஏசா 36:6
சந்தேகம். யெகோவா உங்கள்மீது கோபமாக இருப்பதால் உங்களுக்காக போர் செய்ய மாட்டார்.—ஏசா 36:7, 10
பயம். அசீரிய படைக்கு முன்னால் நீங்கள் வெறும் தூசிதான்.—ஏசா 36:8, 9
ஆசை. அசீரியர்களிடம் சரணடைந்தால் நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்.—ஏசா 36:16, 17
எசேக்கியா யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்
நகரத்தைப் பாதுகாக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்
உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். மக்களையும் ஜெபம் செய்ய சொன்னார்
யெகோவா, எசேக்கியாவின் விசுவாசத்துக்கு பலன் கொடுத்தார். ஒரு தேவதூதனை அனுப்பி, ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரிய போர் வீரர்களைக் கொன்றுபோட்டார்