உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 5
  • “யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றி” சொல்லுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றி” சொல்லுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • சீயோனில் நீதி முளைக்கிறது
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • கடலோரக் காடுகளின் இராட்சதர்களைப் பெருக்குதல்
    விழித்தெழு!—1993
  • ‘அநுக்கிரக காலம்’
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • ‘யெகோவாவின் மரங்கள் திருப்தியடைகின்றன’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 58-62

“யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றி” சொல்லுங்கள்

‘யெகோவாவின் அனுக்கிரக வருஷம்’ என்பது உண்மையிலேயே ஒரு வருஷத்தைக் குறிப்பதில்லை

61:1, 2

  • மீட்பின் செய்தியைக் கேட்டு அதன்படி நடக்க, தாழ்மையுள்ள மக்களுக்கு யெகோவா கொடுக்கும் காலப்பகுதியை இந்த அனுக்கிரக வருஷம் குறிக்கிறது

  • முதல் நூற்றாண்டில், இயேசு அவருடைய ஊழியத்தைத் தொடங்கிய சமயத்தில் அதாவது, கி.பி. 29-ல் அந்த அனுக்கிரக வருஷம் ஆரம்பித்தது. கி.பி. 70-ல் கடவுள் எருசலேமை ‘பழிவாங்கிய நாளில்’ அதாவது, எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்தில் அது முடிவுக்கு வந்தது

  • நம் காலத்தில் அந்த அனுக்கிரக வருஷம் எப்போது ஆரம்பித்தது? 1914-ல் இயேசு ராஜாவாக ஆனபோது ஆரம்பித்தது. மிகுந்த உபத்திரவம் சமயத்தில் அது முடிவுக்கு வரும்

கால வரைப்படம்: கி.பி. 29 முதல் கி.பி. 70 வரையுள்ள அனுக்கிரக வருஷம், 1914 முதல் மிகுந்த உபத்திரவம் வரையுள்ள அனுக்கிரக வருஷம்

‘நீதியின் பெரிய மரங்களை’ கொடுத்து யெகோவா தன்னுடைய மக்களை ஆசீர்வதிக்கிறார்

61:3, 4

  • உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய மரங்கள் பொதுவாக காடுகளில் தனியாக வளராது, ஒன்று சேர்ந்துதான் வளரும். ஒவ்வொரு மரமும் கூட இருக்கும் மற்ற மரங்கள் வளருவதற்கு உதவுகின்றன

  • அந்த மரங்களுடைய வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கும். அதனால் புயல் அடித்தால்கூட அந்த மரங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் சாய்ந்துவிடாது

  • இந்த பெரிய மரங்கள் அங்கிருக்கும் சின்ன சின்ன மரங்களுக்கு நிழல் தருகின்றன. அதிலிருந்து உதிரும் இலைகள் மண்ணுக்கு உரமாக அமைகின்றன

“நீதியின் பெரிய மரங்கள்” என்பது பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீந்திருப்பவர்களைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவ சபைகள் இவர்கள் மூலமாக பல நன்மைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கிறார்கள்

பலமான வேர்களையுடைய பெரிய மரங்கள் சின்ன மரங்களுக்கு நிழல் தருகின்றன
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்