பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 35–38
எபெத்மெலேக்—தைரியமாகவும் அன்பாகவும் நடந்துகொண்டார்
சிதேக்கியா ராஜாவின் அரசவை அதிகாரியாக எபெத்மெலேக் இருந்தார். அவர் நல்ல குணங்களைக் காட்டினார்
எரேமியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற மன உறுதியோடு எபெத்மெலேக் தைரியமாகச் செயல்பட்டார். சிதேக்கியா ராஜாவிடம் பேசி, எரேமியாவை கிணற்றிலிருந்து காப்பாற்றினார்
அவர் எரேமியாவை ரொம்ப அன்பாக நடத்தினார். கிணற்றிலிருந்து எரேமியாவைத் தூக்கும்போது அந்தக் கயிறுகள் அவருடைய அக்குள்களைக் காயப்படுத்தாதபடி சில துணிகளைக் கொடுத்தார்