பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 39–43
ஒவ்வொருவருடைய செயலுக்கு ஏற்றபடி யெகோவா தீர்ப்பு வழங்குவார்
பாபிலோனிடம் சரணடையும்படி யெகோவா சொன்னபோது சிதேக்கியா அதற்கு கீழ்ப்படியவில்லை
சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிக் கொன்றார்கள். பிறகு, அவரைக் குருடாக்கி, செம்பு விலங்குகளை மாட்டி பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுபோனார்கள். சாகும்வரை அவர் அங்குதான் இருந்தார்
எபெத்மெலேக் யெகோவாமீது நம்பிக்கை வைத்தார், யெகோவாவின் தீர்க்கதரிசியான எரேமியாவைக் காப்பாற்றினார்
யூதா அழிக்கப்படும்போது எபெத்மெலேக்கைக் காப்பாற்றுவதாக யெகோவா வாக்குக்கொடுத்தார்
எருசலேமின் அழிவுக்கு முன்பு பல வருஷங்களாக எரேமியா தைரியமாகப் பிரசங்கித்தார்
எருசலேம் சுற்றிவளைக்கப்பட்டபோது யெகோவா எரேமியாவைப் பாதுகாத்தார். பாபிலோனியர்கள் அவரை விடுதலை செய்வதற்கும் ஏற்பாடு செய்தார்