கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அடுத்து எப்போது நான் துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம்?
எசேக்கியேல் பார்த்த ஆலய தரிசனம், யெகோவாவின் மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டுக் காணிக்கைகள் செலுத்துவார்கள் என்பதைக் காட்டுகிறது. நாம் எப்படிப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்தலாம்?—எபி 13:15, 16.
அதற்கான ஒரு சிறந்த வழி, துணைப் பயனியர் ஊழியம் செய்வதாகும். 2018 ஊழிய வருஷத்தில், நிறைய தடவை ஐந்து சனிக்கிழமைகள் அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. முழுநேர வேலை செய்துவிட்டு, வாரயிறுதி நாட்களில் மட்டும் ஊழியம் செய்கிற சகோதர சகோதரிகளுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும். அதோடு மார்ச், ஏப்ரல் மாதங்களிலும், வட்டாரக் கண்காணி சபையைச் சந்திக்கும் மாதத்திலும் துணைப் பயனியராகச் சேவை செய்ய பிரஸ்தாபிகள் 30 மணிநேரமோ 50 மணிநேரமோ ஊழியத்தில் செலவிடலாம்.
நம் சூழ்நிலையின் காரணமாக நம்மால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியாமல்போனால் என்ன செய்வது? முடிந்தளவுக்கு அதிகமாக ஊழியம் செய்யலாம்; அதேசமயத்தில், நம் ஊழியத்தின் தரத்தை மெருகேற்றலாம். நம் சூழ்நிலை எப்படியிருந்தாலும் சரி, யெகோவாமேல் இருக்கும் அன்பால், 2018 ஊழிய வருஷத்தில் அவருக்குச் சிறந்த விதத்தில் சேவை செய்ய தீர்மானமாக இருக்கலாம்.—ஓசி 14:2.
சபீனா ஹெர்னான்டஸைப் போலவே நான் எப்படி பக்திவைராக்கியத்தைக் காட்டலாம்?
யெகோவா என்கூட இருந்தா போதும் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய எது சபீனாவைத் தூண்டுகிறது?
சபீனாவின் உதாரணம் உங்களை எப்படி உற்சாகப்படுத்துகிறது?
2018 ஊழிய வருஷத்தின் எந்த மாதத்தில் உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியும்?