பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 42-45
மீண்டும் உண்மை வணக்கம்!
எசேக்கியேல் பார்த்த ஆலய தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட யூதர்களில் மீந்திருந்த உண்மையானவர்களுக்கு இரண்டு நன்மைகளைத் தந்தது: (1) உண்மை வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படும் என்ற உறுதியை அளித்தது. (2) உண்மை வணக்கத்துக்காக யெகோவா ஏற்படுத்தியிருக்கும் உயர்ந்த தராதரங்களை ஞாபகப்படுத்தியது.
குருமார்கள் ஜனங்களுக்கு யெகோவாவின் தராதரங்களைக் கற்றுக்கொடுப்பார்கள்
சுத்தம் எது, அசுத்தம் எது என்பதை உண்மையும் விவேகமும் உள்ள அடிமை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்; அதற்குச் சில உதாரணங்களை எழுதுங்கள் (kr-E பக். 110-117)
முன்னின்று வழிநடத்துகிறவர்களுக்கு மக்கள் ஆதரவு காட்டுவார்கள்
சபை மூப்பர்களுக்கு நாம் எப்படியெல்லாம் ஆதரவு காட்டலாம்?