பைபிளில் இருக்கும் புதையல்கள் | தானியேல் 10-12
வரவிருந்த ராஜாக்களைப் பற்றி யெகோவா முன்கூட்டியே சொன்னார்
பெர்சியாவை ஆட்சி செய்ய நான்கு ராஜாக்கள் வருவார்கள். நான்காவது ராஜா, “கிரேக்கு தேசத்துக்கு எதிராக எல்லாரையும் தூண்டிவிடுவான்.”
மகா கோரேசு
இரண்டாம் காம்பைஸஸ்
முதலாம் தரியு
முதலாம் சஷ்டா (இவர்தான் எஸ்தரின் கணவரான அகாஸ்வேரு ராஜா என்று நம்பப்படுகிறது)
கிரேக்கு தேசத்தில் பலம்படைத்த ஒரு ராஜா தோன்றி, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வான்.
மகா அலெக்ஸாண்டர்
கிரேக்க சாம்ராஜ்யம் பிளவுபட்டு, அலெக்ஸாண்டரின் நான்கு தளபதிகளால் ஆட்சி செய்யப்படும்.
கஸாண்டர்
லைசிமாக்கஸ்
முதலாம் செலூக்கஸ்
முதலாம் தாலமி