பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஒபதியா 1–யோனா 4
உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
நாம் தவறுகள் செய்யும்போது, யெகோவா நம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டுவிடுவதில்லை. ஆனாலும், நாம் நம்முடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். இதைத்தான் யோனாவைப் பற்றிய பதிவு காட்டுகிறது.
யெகோவா ஒரு நியமிப்பைக் கொடுத்தபோது யோனா என்ன தவறு செய்தார்?
யோனா எதைப் பற்றி ஜெபம் செய்தார், யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்?
யோனா தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதை எப்படிக் காட்டினார்?