கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யோனா புத்தகத்திலிருந்து பாடங்கள்
நமக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக, விசுவாசமுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் அனுபவங்களை யெகோவா தன்னுடைய வார்த்தையில் பதிவு செய்திருக்கிறார். (ரோ 15:4) யோனா புத்தகத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? குடும்ப வழிபாடு: யோனா—யெகோவாவின் இரக்கத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
வீடியோவில் வரும் மூன்று பிரஸ்தாபிகள் என்ன சவால்களைச் சந்தித்தார்கள்?
நாம் கண்டிக்கப்பட்டிருந்தால் அல்லது ஊழியப் பொறுப்புகளை இழந்திருந்தால், யோனா புத்தகத்திலிருந்து எப்படி உற்சாகம் பெறலாம்? (1சா 16:7; யோனா 3:1, 2)
நாம் ஊழியம் செய்யும் பகுதியில் உள்ள மக்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க யோனாவின் பதிவு நமக்கு எப்படி உதவும்? (யோனா 4:11; மத் 5:7)
தீராத உடல்நலப் பிரச்சினைகளை அனுபவிக்கும்போது யோனாவின் அனுபவம் நமக்கு எப்படி ஆறுதல் தரும்? (யோனா 2:1, 2, 7, 9)
பைபிளை வாசித்து, தியானிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?