பைபிளில் இருக்கும் புதையல்கள் | செப்பனியா 1–ஆகாய் 2
யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள்
யெகோவாவுடைய கோபத்தின் நாளில் அவர் நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அவருக்கு நம்மை அர்ப்பணிப்பது மட்டும் போதாது. இஸ்ரவேலர்களுக்கு செப்பனியா கொடுத்த அறிவுரையின்படி நாம் நடக்கவும் வேண்டும்.
யெகோவாவைத் தேடுங்கள்: யெகோவாவுடன் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ளுங்கள்; யெகோவாவுடைய அமைப்போடு இணைந்திருங்கள்
நீதிநெறிகளைத் தேடுங்கள்: யெகோவாவின் நீதியான தராதரங்களை மதித்து நடங்கள்
மனத்தாழ்மையைத் தேடுங்கள்: மனத்தாழ்மையோடு கடவுளுடைய விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு வாழுங்கள், அவருடைய புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்
யெகோவாவையும், அவருடைய நீதிநெறிகளையும், மனத்தாழ்மையையும் நான் எப்படி இன்னும் அதிகமாகத் தேடலாம்?