பைபிளில் இருக்கும் புதையல்கள் | சகரியா 9-14
‘மலைகளின் பள்ளத்தாக்கிலேயே’ தங்கியிருங்கள்
யெகோவா 1914-ல் தன் சர்வலோகப் பேரரசாட்சி என்ற மலையை ஆதரிக்கும் இன்னொரு ‘மலையை,’ அதாவது மேசியானிய அரசாங்கத்தை, நிறுவினார். அப்போதுதான், அவர் “மிகப் பெரிய பள்ளத்தாக்கு” ஒன்றை உருவாக்கினார். 1919-லிருந்து, கடவுளுடைய ஊழியர்களுக்கு அந்த ‘மலைகளின் பள்ளத்தாக்கில்’ பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது
மக்கள் எப்படிப் பாதுகாப்புத் தருகிற ‘பள்ளத்தாக்குக்கு தப்பித்து ஓடுகிறார்கள்’?
அடையாளப்பூர்வ பள்ளத்தாக்குக்கு வெளியே இருக்கிறவர்கள் அர்மகெதோனில் அழிந்துபோவார்கள்
பாதுகாப்புத் தருகிற பள்ளத்தாக்கிலேயே நான் எப்படித் தங்கியிருக்கலாம்?