உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 டிசம்பர் பக். 5
  • வாரத்தின் மத்தியில் நடக்கும் கூட்டத்தில் ஒரு புதிய அம்சம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாரத்தின் மத்தியில் நடக்கும் கூட்டத்தில் ஒரு புதிய அம்சம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • மங்கியெரிகிற திரியை நீங்கள் அணைப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • எருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றிபவனி
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 டிசம்பர் பக். 5
ஆன்லைனில் இருக்கும் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் ஆராய்ச்சிப் பதிப்பில் மத்தேயு புத்தகம்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

வாரத்தின் மத்தியில் நடக்கும் கூட்டத்தில் ஒரு புதிய அம்சம்

ஜனவரி 2018-லிருந்து, வாரத்தின் மத்தியில் நடக்கும் கூட்டத்தில், ஆன்லைனில் இருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்—ஆராய்ச்சிப் பதிப்பில் (nwtsty) கொடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளையும் மீடியாவையும் சிந்திப்போம். உங்கள் மொழியில் இந்த பைபிள் இல்லாவிட்டாலும் இவற்றைச் சிந்திப்போம். கூட்டங்களுக்கு இன்னும் நன்றாகத் தயாரிக்க இது உங்களுக்கு உதவும். அதைவிட முக்கியமாக, அன்பான நம் தகப்பனாகிய யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வர உதவும்!

ஆராய்ச்சிக் குறிப்புகள்

கலாச்சாரம், புவியியல், மற்றும் மொழி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகள் நிறைய பைபிள் வசனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.

மத்தேயு 12:20

மங்கியெரிகிற திரி: அன்று வீடுகளில் பொதுவாக, சின்ன களிமண் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுக்கு ஒலிவ எண்ணெயும் நாரிழைத் திரியும் பயன்படுத்தப்பட்டன. “மங்கியெரிகிற திரி” என்பதற்கான கிரேக்க வார்த்தை, நெருப்பு மங்கியெரியும்போது அல்லது அணைக்கப்பட்டிருக்கும்போது புகைந்துகொண்டிருக்கும் கரிந்துபோன திரியைக் குறிக்கலாம். ஏசாயா 42:3-ல் உள்ள தீர்க்கதரிசனம் இயேசுவின் கரிசனையைப் பற்றிச் சொன்னது. அடக்கி ஒடுக்கப்படுகிற தாழ்மையான மக்களின் மனதில் மங்கியெரிகிற நம்பிக்கைச் சுடரை அவர் ஒருபோதும் அணைக்க மாட்டார்.

மத்தேயு 26:13

உண்மையாகவே: கிரேக்கில், ஆமின். இது, ஆமேன் என்ற எபிரெய வார்த்தையின் எழுத்துப்பெயர்ப்பு. இதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே.” ஒரு வாக்கியத்தை, வாக்குறுதியை, அல்லது தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன்பு இயேசு இதை அடிக்கடி பயன்படுத்தினார். இப்படி, அவர் சொன்ன விஷயம் முழுக்க முழுக்க உண்மை என்பதையும், நம்பகமானது என்பதையும் வலியுறுத்தினார். இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் இயேசு பயன்படுத்தியது, மற்ற எந்தப் புனித புத்தகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையை இயேசு இரண்டு தடவை சொன்னது (ஆமென் ஆமென்), “உண்மையாகவே உண்மையாகவே” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; உதாரணத்துக்கு, யோவான் சுவிசேஷம் முழுவதிலும் இதை நம்மால் பார்க்க முடிகிறது.—யோவா 1:51.

மீடியா

பைபிளில் இருக்கும் நிறைய விவரங்களை எடுத்துக்காட்டுகிற ஃபோட்டோக்கள், படங்கள், ஊமைப் படங்கள், அனிமேஷன்கள் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்

இந்தச் சின்ன வீடியோ, கிழக்கிலிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையைக் காட்டுகிறது. இன்றுள்ள எட்-டூர் கிராமத்தில் ஆரம்பித்து, ஒலிவ மலையின் உயரமான ஒரு பகுதிவரை காட்டுகிறது. எட்-டூர் கிராமம்தான் பைபிளில் சொல்லப்பட்ட பெத்பகே ஊராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெத்பகேயின் கிழக்கே இருக்கிற ஒலிவ மலையின் கிழக்குச் சரிவிலே பெத்தானியா இருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமில் இருந்தபோது, பெத்தானியாவில் தங்குவது வழக்கம். இன்று அந்தப் பகுதி எல்-அஸாரீயா (எல் ஐஸாரீயா) என்று அழைக்கப்படுகிறது. “லாசருவின் இடம்” என்பதுதான் இந்த அரபியப் பெயரின் அர்த்தம். மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியவர்களின் வீட்டில் இயேசு தங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. (மத் 21:17; மாற் 11:11; லூ 21:37; யோவா 11:1) இயேசு அவர்களுடைய வீட்டிலிருந்து எருசலேமுக்குப் போனபோது, இந்த வீடியோவில் காட்டப்படுகிற வழியில் போயிருக்கலாம். கி.பி. 33, நிசான் 9-ம் தேதி, இயேசு பெத்பகே ஊரிலிருந்து ஒரு கழுதையின் மேல் ஏறி ஒலிவ மலை வழியாக எருசலேமுக்குப் போயிருக்கலாம்.

பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு இயேசு இந்த வழியில் போயிருக்கலாம்
  1. பெத்தானியாவிலிருந்து பெத்பகேவுக்குப் போகும் சாலை

  2. பெத்பகே

  3. ஒலிவ மலை

  4. கீதரோன் பள்ளத்தாக்கு

  5. ஆலயப் பகுதி

ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

ஆணி துளைக்கப்பட்ட மனித குதங்கால் எலும்பு

4.5 அங்குல (11.5 செ.மீ.) நீளமுள்ள இரும்பு ஆணியால் துளைக்கப்பட்ட ஒரு மனித குதிங்கால் எலும்பு, 1968-ல் வட எருசலேமில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. பிற்பாடு, அதேபோல் செய்யப்பட்ட ஒரு செயற்கை குதிங்கால் எலும்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். 1968-ல் கண்டெடுக்கப்பட்ட குதிங்கால் எலும்பு ரோமர்களின் காலத்தைச் சேர்ந்தது. ஆட்களை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அந்தப் புதைபொருள் கண்டுபிடிப்பு ஒரு அத்தாட்சி. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை மரக் கம்பத்தில் அறைவதற்காக ரோம வீரர்கள் அதுபோன்ற ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் குதிங்கால் எலும்பு, ஆஸ்யூரி என்ற ஒரு கல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது; அழுகிப்போன சடலத்தில் இருந்த உலர்ந்த எலும்புகள் இந்தப் பெட்டியில் வைக்கப்பட்டன. மரக் கம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் அடக்கமும் செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.—மத் 27:35.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்