பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 3-4
ஓய்வுநாளில் குணப்படுத்துதல்
யூத மதத் தலைவர்களுடைய மனப்பான்மையைப் பார்த்து இயேசு ஏன் ரொம்பவே வேதனைப்பட்டார்? ஏனென்றால், ஒன்றுக்கும் உதவாத ஏராளமான சட்டங்களைப் போட்டு ஓய்வுநாளை அவர்கள் பாரமாக்கினார்கள். உதாரணத்துக்கு, ஓய்வுநாளில் ஒரு பூச்சியைக் கொல்வதுகூட தடை செய்யப்பட்டிருந்தது. ஒருவர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்தால் மட்டும்தான், அவரைக் குணப்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஒருவேளை ஓய்வுநாளில், எலும்பு உடைந்துபோனாலோ சுளுக்கு ஏற்பட்டாலோகூட, சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை. சூம்பிய கையுடைய மனிதன்மேல் அந்த மதத் தலைவர்களுக்கு அக்கறையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.