பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 5-6
சரியான உள்நோக்கத்தோடு இயேசுவைப் பின்பற்றுங்கள்
புரிந்துகொள்ள கஷ்டமான ஓர் உவமையை இயேசு சொன்னபோது, அவருடைய சீஷர்கள் சிலர் இடறலடைந்தார்கள்; அவரைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். ஆனால், ஒருநாளுக்கு முன்புதான் இயேசு அவர்களுக்கு அற்புதமாக உணவளித்தார்; அதன் மூலம், கடவுளிடமிருந்துதான் தனக்கு வல்லமை கிடைத்தது என்பதை உறுதிப்படுத்தினார். அப்படியிருந்தும், அவர்கள் ஏன் இடறலடைந்தார்கள்? சுயநலத்துக்காகத்தான் அவர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்! பொருளாதார ரீதியில் ஆதாயம் பெறுவதே அவர்களுடைய நோக்கம்!
நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் ஏன் இயேசுவைப் பின்பற்றுகிறேன்? இப்போது கிடைக்கிற, எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்கள்தான் முக்கியக் காரணமா? அல்லது யெகோவாவை நேசிப்பதாலும், அவரைப் பிரியப்படுத்த ஆசைப்படுவதாலும்தான் இயேசுவைப் பின்பற்றுகிறேனா?’
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காரணங்களுக்காக மட்டுமே யெகோவாவுக்குச் சேவை செய்தால், நாம் எப்படி இடறலடைந்துவிடலாம்?
கடவுளுடைய மக்களோடு இருப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது
பூஞ்சோலையில் வாழ ஆசைப்படுகிறோம்