கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்—அருமையான ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்
ஏன் முக்கியம்: தான் இறப்பதற்கு முந்தினநாள் ராத்திரி, சீஷர்கள் ‘முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்கு’ உதவும்படி இயேசு ஜெபம் செய்தார். (யோவா 17:23) நாம் தொடர்ந்து ஒன்றுபட்டிருப்பதற்கு, ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும்; அந்த அன்பு “தீங்கை கணக்கு வைக்காது.”—1கொ 13:5.
எப்படிச் செய்வது:
மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்ப்பதன் மூலம் யெகோவாவைப் பின்பற்றுங்கள்
தாராளமாக மன்னியுங்கள்
ஒரு பிரச்சினையை சரி செய்ததற்குப் பிறகு, மறுபடியும் கிளறாதீர்கள்.—நீதி 17:9
“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—தீங்கைக் கணக்கு வைக்காதீர்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
வீடியோவின் முதல் பாகத்தில், ‘தீங்கை கணக்கு வைத்திருந்ததை’ ஹெலன் எப்படிக் காட்டினார்?
இரண்டாவது பாகத்தில், தனக்கு இருந்த தவறான எண்ணத்தைச் சரி செய்துகொண்டு ஹெலன் எப்படி நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறார்?
ஹெலன் நடந்துகொண்ட விதம் சபையின் ஒற்றுமைக்கு எப்படிப் பங்களித்தது?
தீங்கைக் கணக்கு வைத்திருந்தால் யார் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்?