கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நம்முடைய நிவாரண ஊழியத்தின் மூலம் கரீபியனில் இருக்கிற கிறிஸ்தவர்கள் எப்படி நன்மையடைந்தார்கள்?
முதல் நூற்றாண்டைப் போலவே, இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சக கிறிஸ்தவர்களுக்கு அன்பு காட்டும் அருமையான வாய்ப்பு நமக்கு இன்றும் இருக்கிறது. (யோவா 13:34, 35) கரீபியனில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு மற்ற கிறிஸ்தவர்கள் எப்படி உதவினார்கள் என்பதை, அன்பு—செயலில்: தீவுகளில் நடக்கும் நிவாரண வேலைகள் என்ற வீடியோவைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
கரீபியனில் இருக்கிற சகோதரர்கள், எர்மா மற்றும் மரியா சூறாவளியால் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்?
கரீபியனில் இருக்கிற சகோதரர்களுக்கு சக கிறிஸ்தவர்கள் மூலம் யெகோவா எப்படி உதவினார்?
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள், சகோதரர்கள் காட்டிய அன்பையும் தாராள குணத்தையும் பற்றி எப்படி உணர்ந்தார்கள்?
கரீபியனில் நடந்த நிவாரண வேலையில் எத்தனை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள்?
நிவாரண வேலையில் ஈடுபட நாம் எல்லாரும் என்ன செய்ய வேண்டும்?
இந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து, ஓர் அன்பான அமைப்பின் பாகமாக இருப்பதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?