பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 தெசலோனிக்கேயர் 1-3
அந்த அக்கிரமக்காரன் யாரென்று தெளிவாகிவிட்டது
இந்த வசனங்களில் பவுல் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்?
‘தடை’ (வச. 6)—அநேகமாக, அப்போஸ்தலர்கள்
‘வெளிப்படுவது’ (வச. 6)—அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகவே பொய்ப் போதனைகளைப் பரப்பினார்கள், வெளிவேஷம் போட்டார்கள்
“மர்மமாக இருக்கிற இந்த அக்கிரமம்” (வச. 7)—பவுலின் நாளில் “அந்த அக்கிரமக்காரன்” யார் என்று தெளிவாகத் தெரியவில்லை
“அந்த அக்கிரமக்காரன்” (வச. 8)—இன்று, கிறிஸ்தவமண்டல குருமார் தொகுதி
‘நம் எஜமானாகிய இயேசு தான் பிரசன்னமாகி இருப்பதைத் தெரியப்படுத்தும்போது . . . [அந்த அக்கிரமக்காரனை] அழிப்பார்’ (வச. 8)—இயேசு ‘அந்த அக்கிரமக்காரனுக்கும்’ சாத்தானுடைய உலகத்துக்கும் யெகோவாவின் தண்டனைத் தீர்ப்புகளைக் கொடுப்பார்; இதன் மூலம், பரலோகத்தில் ராஜாவாகப் பிரசன்னமாகி இருப்பதைத் தெரியப்படுத்துவார்
மிகுந்த ஆர்வத்தோடும் அவசர உணர்வோடும் பிரசங்கிக்க இந்த வசனங்கள் உங்களை எப்படித் தூண்டுகின்றன?