பைபிளில் இருக்கும் புதையல்கள் | தீத்து 1–பிலேமோன்
“மூப்பர்களை நியமியுங்கள்”
‘ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிக்கும்’ பொறுப்பு தீத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் இன்று, சபைகளில் மூப்பர்களை நியமிக்கும் பொறுப்பு வட்டாரக் கண்காணிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆளும் குழு
முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டதைப் போலவே, மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கிற முக்கியமான பொறுப்பை ஆளும் குழு வட்டாரக் கண்காணிகளுக்குக் கொடுத்திருக்கிறது.
வட்டாரக் கண்காணிகள்
மூப்பர்கள் செய்யும் சிபாரிசுகளை வட்டாரக் கண்காணிகள் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும், அதைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டும், பிறகு தகுதியுள்ளவர்களை நியமிக்க வேண்டும்.
மூப்பர்கள்
சகோதரர்கள் மூப்பர்களாக நியமிக்கப்பட்ட பிறகும், பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய வேண்டும்.