பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 12-13
கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு அடையாளம்
கண்டித்தல் என்பது தண்டிப்பதையும், திருத்துவதையும், அறிவுறுத்துவதையும், பயிற்றுவிப்பதையும் குறிக்கிறது. அன்பான அப்பா தன் பிள்ளைகளைக் கண்டிப்பதுபோல் யெகோவா நம்மைக் கண்டிக்கிறார். முக்கியமாக, இவற்றின் மூலம் அவர் நம்மைக் கண்டிக்கிறார்:
பைபிள் வாசிப்பு, தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள், தியானம்
சகோதர சகோதரிகள் தரும் அறிவுரை அல்லது புத்திமதி
நம் தவறுகளின் பின்விளைவுகள்
நீதி விசாரணைக் குழு தரும் கண்டிப்பு; அல்லது, சபைநீக்கம்
யெகோவா அனுமதிக்கும் சோதனைகள் அல்லது துன்புறுத்துதல்.—w15 9/15 பக். 21 பாரா 13; it-1-E பக். 629