பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 9-11
“பூமியெங்கும் ஒரே மொழி இருந்தது”
பாபேலில், தனக்குக் கீழ்ப்படியாதவர்களின் மொழியை யெகோவா குழப்பிவிட்டார். ஆனால் இன்று, எல்லா தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த திரள் கூட்டமான மக்களைக் கூட்டிச்சேர்த்து, அவர்களுக்கு ‘சுத்தமான பாஷையை’ தருகிறார். அவர்கள் ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வதற்காகவும், தோளோடு தோள் சேர்ந்து அவருக்குச் சேவை செய்வதற்காகவும்’ அப்படிச் செய்கிறார். (செப் 3:9; வெளி 7:9) இந்த ‘சுத்தமான பாஷை,’ யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி பைபிள் சொல்லும் சத்தியத்தைக் குறிக்கிறது.
புதிய பாஷையைக் கற்றுக்கொள்வதற்கு, புதிய வார்த்தைகளை மட்டும் நாம் மனப்பாடம் செய்வதில்லை. புதிய விதத்தில் சிந்திப்பதற்கும் கற்றுக்கொள்கிறோம். அதேபோல், சத்தியம் என்ற சுத்தமான பாஷையை நாம் கற்றுக்கொள்ளும்போது, நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்கிறோம். (ரோ 12:2) இதைத் தொடர்ந்து செய்கிறோம். அதனால், கடவுளுடைய மக்களாகிய நம்மால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது.—1கொ 1:10.