உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஏப்ரல் பக். 7
  • “பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • மாயமந்திரம்—விளையாட்டா? வினையா?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுங்கள், யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • ஆவியுலகத் தொடர்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    விழித்தெழு!—2017
  • யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஏப்ரல் பக். 7
ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட மணி மாலையை ஒருவர் குப்பைத்தொட்டியில் தூக்கிப்போடுகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்”

நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவாவுக்கு மட்டுமே முழு தகுதியும் இருக்கிறதென்று யாக்கோபு தெரிந்துவைத்திருந்தார். அதுவும் சிலை வணக்கம் பற்றி யெகோவா எந்தச் சட்டமும் கொடுக்காதபோதே அதைப் புரிந்துவைத்திருந்தார். (யாத் 20:3-5) யெகோவா தன்னை பெத்தேலுக்குத் திரும்பிப்போக சொன்னபோது, யாக்கோபு தன்னோடிருந்த எல்லாரிடமும் அவர்களுடைய சிலைகளைத் தூக்கிப்போடும்படி சொன்னார். சிலர் காதுகளில் போட்டிருந்த தோடுகளையும் (இவை தாயத்துகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்) அந்தச் சிலைகளோடு சேர்த்து யாக்கோபு தூக்கிப் போட்டார். (ஆதி 35:1-4) யாக்கோபு செய்ததைப் பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்!

இன்று, நாம் எப்படி யெகோவாவுக்கு மட்டுமே நம் வணக்கத்தைக் கொடுக்கலாம்? ஒரு முக்கியமான வழி, சிலை வழிபாட்டோடும் ஆவியுலகத் தொடர்போடும் சம்பந்தப்பட்ட எதையும் செய்யாமல் இருப்பதுதான். அதற்கு, மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பொருளையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அதோடு, நாம் எப்படிப்பட்ட பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம் என்று கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ரத்தக் காட்டேரிகள், பிணம் நடந்துவருவது மாதிரியான விஷயங்கள், அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றைப் பற்றிய புத்தகங்களையோ திரைப்படங்களையோ நான் ரசிக்கிறேனா? நான் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு மாயாஜாலத்தை, வசியம் செய்வதை, செய்வினை வைப்பதையெல்லாம் நகைச்சுவையான ஒன்றாகக் காட்டுகிறதா?’ யெகோவா வெறுக்கிற விஷயங்களின் பக்கமே நாம் போகக் கூடாது.—சங் 97:10.

“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • மெத்தையில் படுத்திருக்கும் ஒரு குழந்தை கையில் தாயத்தை அணிந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு பின்னால், அதன் தாய், பைபிள் படிப்பு எடுக்கும் தம்பதியுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.

    பலேசா என்ற பைபிள் மாணாக்கருடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தது?

  • அந்தத் தம்பதியும் அவர்களுடைய பைபிள் மாணாக்கரும் உதவிக்காக இரண்டு மூப்பர்களை சந்திக்கிறார்கள்.

    உங்களுக்கோ, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ, உங்கள் பைபிள் படிப்புகளுக்கோ ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் மூப்பர்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்வது ஏன் நல்லது?

  • அந்தப் பைபிள் மாணாக்கர் தன்னுடைய குழந்தையின் தாயத்தை அடுப்பில் போட்டு எரிக்கிறாள்.

    பிசாசை எதிர்த்து நில்லுங்கள், கடவுளிடம் நெருங்கி வாருங்கள்.—யாக் 4:7, 8

    யெகோவாவுடைய பாதுகாப்பு நமக்கு வேண்டுமென்றால் நாம் எந்த விஷயங்களையெல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும்?

  • பலேசா என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தார்?

  • நீங்கள் வாழும் இடத்தில், பேய்களுடைய கட்டுப்பாட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்