பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 34-35
கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்
அக்கம்பக்கத்தார், கூடவேலை செய்கிறவர்கள், கூட படிக்கிறவர்கள் நல்ல குணங்களைக் காட்டுகிறார்கள் என்பதற்காக அவர்கள் நமக்கு நல்ல சகவாசம் ஆகிவிடுவார்களா? ஒருவர் நமக்கு நல்ல நண்பரா கெட்ட நண்பரா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
அவரோடு இருக்கிற சகவாசம், யெகோவாவுக்கும் எனக்கும் இருக்கிற நட்பைப் பலப்படுத்துமா?
அவருடைய பேச்சு அவருக்கு எது முக்கியம் என்று காட்டுகிறது?—மத் 12:34
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட நண்பர்கள், யெகோவாவோட இருக்கிற பந்தத்தை பலப்படுத்த உதவுறாங்களா இல்ல அத கெடுக்குறாங்களா?’