தேவராஜ்ய கூட்டுறவை அனுபவித்துக்களித்தல்
1 யெகோவாவின் சாட்சிகள் ஒருவரையொருவர் “சகோதரர்” “சகோதரி” என்றழைக்கின்றனர். யெகோவா தேவனுடைய எல்லா ஊழியக்காரரிடையேயும் இருக்க வேண்டிய நெருங்கிய உறவை இது குறிப்பிடுகிறது.
2 “சகோதரன்” என்ற பதம் சொல்லர்த்தமாக “ஒரே பெற்றோருடைய மகன்” என்பதைக் குறிக்கிறது. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் ஊழியர்களாக இருக்கக்கூடிய அனைவருடனும் அனலான ஆவிக்குரிய உறவின் இந்த பந்தத்தை நீங்கள் உணருகிறீர்களா? நம்முடைய கிறிஸ்தவ கூட்டாளிகளிடம் நம்மை சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் நிரூபிக்கக்கூடிய அவ்வகையான அன்பை நாம் எப்படி கூடுதலாக விருத்தி செய்யலாம்?
கூட்டங்களில்
3 இயேசுவின் சீஷர்கள் ஒன்றாக கூடிவருவதன் முக்கியத்துவத்தை மதித்துணர்ந்தார்கள். (அப். 2:42, 46; 20:7, 8) நாமும்கூட அனலான கிறிஸ்தவ கூட்டுறவின் சிலாக்கியத்தை அருமையானதாக கருதுகிறோம். (ரோ. 16:3, 5) என்றபோதிலும் கூட்டங்களில் நாம் பேசும் காரியங்கள் நமது சகோதர சகோதரிகளின் ஆவிக்குரிய சுகநலன்களைக் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடையவர்களாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறதா? கூட்டங்களில் நாம் சொல்லும் பதில்கள் மூலம் நாம் மற்றவர்களுடைய நலனில் அன்பையும் சுயநலமற்ற அக்கறையையும் காட்டுபவர்களாக இருப்போம். நற்செய்தியை அறிவிப்பதில் வைராக்கியமுள்ளவர்களாக இருப்பதற்கும் அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் முன்மாதிரிகளாயிருக்கவும் நம்முடைய சகோதரர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.—எபி. 10:24, 25.
4 கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் தேவராஜ்ய கூட்டுறவைக் கொண்டிருப்பதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. புதியவர்களை வரவேற்பதன் மூலமும் நம்மால் இயன்றளவுக்கு எல்லாருடனும் அறிமுகமாவதன் மூலமும் நமது கூட்டுறவை விரிவாக்கிக்கொள்வதற்கு இந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். வெளி ஊழிய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும் மற்ற கட்டியெழுப்பக்கூடிய சம்பாஷணைகளும் மற்றவர்களை உற்சாகமூட்ட உதவி செய்யும்.—1 தெச. 5:11, 15.
ஆரோக்கியமான கூட்டுறவு
5 கடவுள் அருவருக்கக்கூடிய எல்லாக் காரியங்களையும் விரும்பக்கூடிய பொல்லாத மற்றும் நோயுற்ற சமுதாயத்தினரின் கூட்டுறவில் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர், அதே சமயத்தில் கடவுளுடனும் சேர்ந்து நடக்கமுடியாது. பைபிள் எச்சரிப்பதாவது: “கெட்ட சகவாசம் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரி. 15:33) சபையிலுள்ள ஒருசிலர் சமூக கூட்டங்களுக்குச் சத்தியத்தில் ஆர்வமில்லாத உலகப் பிரகாரமான கூட்டாளிகளையும் அவிசுவாசியான உறவினர்களையும் அழைக்கும் மனச்சாய்வு கொண்டவர்களாக இருக்கக்கூடும். இது அவர்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு உற்சாகப்படுத்தும் என்று எண்ணி அப்படிச் செய்கிறார்கள். என்றபோதிலும் இது ஞானமுள்ளதாயும் வேதவசனங்களுக்கு இசைவானதாயுமிருக்கிறதா?
6 உலக மனிதரோடு, அவிசுவாசிகளோடு அல்லது சாதாரண மனிதரோடு நமக்கிருக்கும் தொடர்புகளில் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறோம். (ஆங்கில காவற்கோபுரம் நவம்பர் 15, 1988 பக்கங்கள் 15, 16-ஐ பார்க்கவும்.) இன்னமும் தொடர்ந்து உலக வழிகளை நாடக்கூடியவர்களும் யெகோவாவின் வணக்கத்தாராக ஆகாத ஆட்களுடனும் ஏன் நாம் அனாவசியமான தோழமை தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும்? (2 கொரி. 6:14, 15) ஆவிக்குரிய பிரகாரமாய் அலட்சிய மனப்பாங்குடைய ஒருசிலர், விசுவாசத்தில் பலமுள்ளவர்களாவதற்கு உதவக்கூடிய முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் கூட்டுறவை நாடுவதற்குப் பதிலாக தங்களுடைய உலகப் பிரகாரமான சிந்தனையை யார் பற்றியிருக்கிறார்களோ அந்த ஆட்களையே அவர்கள் நாடி செல்லக்கூடும். உலகப் பிரகாரமான ஒழுக்க நெறிக்குட்படாத ஆட்களுடன் தோழமை கூட்டங்களில் ஆஜராக இருப்பதானது தங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி கரைப்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் மதித்துணர தவறுகின்றனர்.—2 தெச. 3:14, 15-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
7 சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புகிற யாவரும், யெகோவாவுக்குத் தங்களை அற்பணித்திருக்கும் கூட்டாளிகளை, சத்தியத்தில் நடப்பதற்குத் தங்களுக்கு உதவக்கூடிய மற்றும் கடவுளை சேவிப்பதில் முன்னேறுவதற்கு தங்களுக்குத் துணைப்புரியக்கூடியவர்களையே தேடி நாட வேண்டும். நமது நண்பர்களும் கூட்டாளிகளும் நம்மீது ஆழமான பாதிப்பை உடையவர்களாய் இருக்கக்கூடும். ஆகையால் யெகோவா தேவனுடன் நெருங்கிய கூட்டுறவை காத்துவரக்கூடிய தேவபக்தியுள்ள ஆட்களின் கூட்டுறவை நாடுவது ஆ! என்னே ஒரு ஞானமுள்ள காரியமாயிருக்கும்!