உங்கள் சகோதரர்களை நன்கு அறிந்தவர்களாயிருங்கள்
1 நம்முடைய உடன் வணக்கத்தாருடனான நம்முடைய உறவு ராஜ்ய மன்றத்தில் வெறுமனே அவர்களுடன் கூட்டங்களில் கலந்துகொள்வதைக்காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவர்களாக இருக்கிறோம், அது இயேசுவோடு ஓர் ஆவிக்குரிய உறவுக்குள் நம்மைக் கொண்டுவருகிறது. (மாற். 3:34, 35) அது, நம்மைக் கிறிஸ்தவ சபையிலுள்ள மற்றவர்களுடன்—நாம் அன்புகூரும்படி கட்டளையிடப்பட்டிருக்கிற நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன்—ஓர் ஆவிக்குரிய குடும்ப உறவுக்குள் கொண்டுவருகிறது. (யோவா. 13:35) இவ்வாறு, “தேவனுடைய வீட்டா”ரோடு கூட்டுறவு கொண்டிருப்பவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்களாயிருக்க பிரயாசப்படவேண்டும்.—எபே. 2:19.
2 உங்கள் சகோதரர்களின் பெயர்களை அறிந்திருங்கள்: உங்கள் சபை புத்தகப் படிப்பில் உள்ள எல்லா சகோதர சகோதரிகளின் பெயர்களையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? கலந்துகொள்ளும் எல்லாருடைய பெயரையும் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் அநேகருடைய பெயர்களை எளிதில் அறிந்துகொள்ளும் விதமாக தொகுதியானது பொதுவாக சிறியதாய் இருக்கிறது. அவர்களுடைய பெயர்களைக்கூட நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் அவர்களை நன்கு அறிந்திருப்பதாக உங்களால் சொல்லமுடியுமா?
3 பிள்ளைகள் உட்பட ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மற்றவர்களை அறிந்துகொள்வதைப் பற்றி என்ன? நண்பர்களின் சிறிய வட்டத்திற்குள் மாத்திரம் கூட்டுறவுகொள்ளும் மனச்சாய்வை நாம் கொண்டிருக்கலாம். ஒழுங்காக குறிப்பிட்ட சிலருடன் கூட்டுறவை அனுபவித்துக்களிப்பது தவறில்லையென்றாலும், ஒருசிலருடன் மட்டுமே கனிவான வாழ்த்துக்களையும் கட்டியெழுப்பும் சம்பாஷணையையும் மட்டுப்படுத்திக்கொள்ள நாம் விரும்பமாட்டோம். நம்முடைய சகோதர சகோதரிகள் அனைவரையும் நன்கு அறிந்துகொள்ளுவதில் “விரிவடைய” நாம் முயற்சி செய்யவேண்டும். (2 கொ. 6:11-13, NW) அது தெளிவாகவே அவர்களுடைய பெயர்களை அறிந்திருப்பதை உட்படுத்தும்.
4 சபை கூட்டங்களை நடத்தும் சகோதரர்கள் கலந்துகொள்ளும் அனைவருடைய பெயர்களையும் அறிந்திருக்க முயற்சிசெய்ய வேண்டும். மேடையிலிருந்து ஒவ்வொருவரையும் பெயர்சொல்லி அழைப்பது அவர்களுடைய பதில்கள் போற்றப்படுகின்றன என்று அவர்களை உணரச்செய்கிறது. அதேசமயத்தில் மற்றவர்கள் அவர்களுடைய பெயர்களை அறிந்துகொள்ள இது உதவிசெய்கிறது. சபையாரில் சில புதியவர்களோ சந்திக்க வந்திருப்பவர்களோ எப்பொழுதும் இருப்பார்கள் என்பது உண்மையே. இது எல்லாருடைய பெயர்களையும் அறிந்திருப்பதை யாருக்கும் கடினமாக்குகிறது. எனினும், உள்ளார்ந்த முயற்சியைத் தொடர்வது மற்றவர்களை உற்சாகப்படுத்தி, உண்மையான தனிப்பட்ட அக்கறையை பிரதிபலிக்கச் செய்கிறது.—ரோ. 1:10, 11.
5 நன்கு அறிமுகமானவர்களாக இருக்கும் முயற்சியில் முந்திக்கொள்ளுங்கள்: பொதுவாக பயணக் கண்காணிகள் அதிகளவான சகோதர சகோதரிகளுடன் நன்கு அறிமுகமானவர்களாக இருக்க முடிகிறது. அவர்கள் இதை எவ்வாறு செய்கிறார்கள்? மூன்று முக்கியமான வழிகளில்: (1) அவர்கள் வெளி ஊழியத்தில் ஒழுங்காக அவர்களுடன் வேலைசெய்கின்றனர்; (2) அவர்கள் தங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் அனுமதிப்பதற்கேற்ப அவர்களுடைய வீடுகளுக்குச் செல்லும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றனர்; (3) அவர்கள் கூட்டங்களில் முதியவர்களையும் பிள்ளைகளையும் வரவேற்கும் முயற்சியில் முந்திக்கொள்ளுகின்றனர்.
6 உங்கள் கூட்டுறவுகளை விரிவுபடுத்துவதற்கும் உங்கள் சகோதரர்களை நன்கு அறிந்துகொள்வதற்கும் இருக்கும் வழிகளை நீங்கள் காணக்கூடுமா? வெளி ஊழியத்தில் நம்முடன் செல்ல நிச்சயமாகவே நாம் மற்றவர்களை அழைக்கலாம். வீட்டுக்கு வீடு செல்லுதல், மறுசந்திப்புகள் செய்தல், பைபிள் படிப்புகளுக்குச் செல்லுதல், அல்லது பத்திரிகைகளைக் கொண்டு தெரு ஊழியம் செய்தல் ஆகிய அனைத்தும் நன்கு அறிமுகமானவர்களாக ஆவதற்கிருக்கும் மிகச் சிறந்த வழிகளாகும். ஒருவேளை எப்பொழுதாகிலும் சாப்பாட்டையாவது சிற்றுண்டியையாவது பகிர்ந்துகொள்ள உங்களுடைய வீடுகளுக்கு வரும்படி மற்றவர்களை அழைப்பதும் சிறந்ததாகும். புதியவர்களை அல்லது கூச்ச சுபாவமுடையவர்களை அணுகும் முயற்சியில் முந்திக்கொள்ளுதல் அவர்களை ஆவிக்குரிய விதமாக அதிகம் கட்டியெழுப்புவதோடு பெரும் ஆசீர்வாதங்களையும் கொண்டுவரும்.—அப். 20:35; 1 தெ. 5:11.
7 பவுல் தன்னுடைய சகோதரர்களை நன்கு அறிந்திருந்தார். அவர்கள்மீது அவர் தன்னலமற்ற அக்கறையையும் அவர்களிடமாக உண்மையான அன்பையும் கொண்டிருந்ததற்கு தன்னுடைய கடிதத்தில் அவர்களில் அநேகரை தனிப்பட்ட விதத்தில் பெயர் சொல்லிக் குறிப்பிட்டது அத்தாட்சியளித்தது. (1 தெ. 2:17; 2 தீ. 4:19, 20) நம்முடைய சகோதரர்களை நன்கு அறிந்துகொள்ள நாம் எடுக்கும் முயற்சிகள் நம் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.