பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 6-7
“பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்”
எகிப்தியர்கள்மீது தண்டனைகளைக் கொண்டுவந்து அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்குமுன், தான் செய்யப்போவதைப் பற்றி யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். இதுவரை பார்க்காத விதங்களில் யெகோவாவின் வல்லமையை அவர்கள் பார்ப்பார்கள். எகிப்தியர்களும் யெகோவா யார் என்று நிச்சயம் தெரிந்துகொள்வார்கள். கொடுத்த வாக்கை யெகோவா காப்பாற்றியபோது இஸ்ரவேலர்களுடைய விசுவாசம் பலப்பட்டது. இது, எகிப்தில் இருந்த பொய் மதங்களின் தாக்கத்தை எதிர்த்துச் செயல்பட அவர்களுக்கு உதவியது.
இந்த பைபிள் சம்பவம், எதிர்காலத்தைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் உங்கள் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது?