கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தைரியத்தைப் பற்றிப் படைப்புகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?
தன்னுடைய குணங்களை வளர்த்துக்கொள்ள யெகோவா நமக்கு உதவுகிறார். அதற்கு அவர் பயன்படுத்தும் ஒரு வழி, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுடைய உதாரணங்கள். இன்னொரு வழி, அவருடைய படைப்புகள். (யோபு 12:7, 8) சிங்கம், குதிரை, கீரி, ரீங்காரச் சிட்டு மற்றும் யானை ஆகிய மிருகங்களிடமிருந்து தைரியத்தைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்?
படைப்புகளிடமிருந்து தைரியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
குட்டிகளைப் பாதுகாப்பதில் பெண் சிங்கங்கள் எப்படித் தைரியத்தைக் காட்டுகின்றன?
போர் களத்தில் தைரியமாக இருக்க குதிரைகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கப்பட்டது?
விஷப்பாம்புகளைப் பார்த்து கீரி ஏன் பயப்படுவதில்லை?
மிகச் சிறிய ரீங்காரச் சிட்டுகள் எப்படித் தைரியத்தைக் காட்டுகின்றன?
யானைகள் தன்னுடைய கூட்டத்தில் இருக்கும் மற்ற யானைகளை எப்படித் தைரியமாகப் பாதுகாக்கின்றன?
தைரியத்தைப் பற்றி இந்த மிருகங்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?