கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவா தம் மக்களைப் பாதுகாக்கிறார்
முதல் முறையாக கொண்டாடப்பட்ட பஸ்கா ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அன்று ராத்திரி, தன்னுடைய மூத்த மகன் இறந்துபோனது தெரிந்தவுடன், “புறப்பட்டுப் போங்கள். நீங்களும் மற்ற இஸ்ரவேலர்களும் என்னுடைய ஜனங்களின் நடுவிலிருந்து போய்விடுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, போய் யெகோவாவை வணங்குங்கள்” என்று பார்வோன் மோசேயிடம் சொன்னான். (யாத் 12:31) யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார் என்பதைக் காட்டினார்.
யெகோவாவின் மக்களுடைய நவீன கால சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால், அவர் தொடர்ந்து தன் மக்களை வழிநடத்தி பாதுகாத்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. உலகத் தலைமையகத்தில், ‘யெகோவாவுடைய பெயருக்கென்று ஒரு ஜனம்’ என்ற மியூசியத்தில் இதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
வார்விக் மியூசியத்திற்கு ஒரு சுற்றுலா: ‘யெகோவாவுடைய பெயருக்கென்று ஒரு ஜனம்’ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பைபிள்மேல் மற்றவர்களுடைய விசுவாசத்தை வளர்க்க, 1914-லிருந்து என்ன புதிய முறையை பைபிள் மாணாக்கர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள், அதனால் என்ன பலன் கிடைத்தது?
1916 மற்றும் 1918-ல் என்ன சோதனைகள் வந்தன, அமைப்பை யெகோவாதான் வழிநடத்துகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சிகள் இருந்தன?
எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவின் மக்கள் எப்படி விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்?
1935-ல் யெகோவாவின் மக்கள் என்ன புதிய புரிந்துகொள்ளுதலைப் பெற்றார்கள், இது அவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
நீங்கள் இந்த மியூசியத்தை சுற்றிப் பார்த்திருந்தால், எந்த விஷயம், யெகோவா தன் மக்களை வழிநடத்தி பாதுகாத்து வருகிறார் என்பதில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியது?