பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 6-7
நன்றி தெரிவிப்பது
நாம் செய்கிற ஜெபங்கள் மூலமாகவும் நாம் நடந்துகொள்ளும் விதத்தின் மூலமாகவும் யெகோவாவுக்கு நன்றியைத் தெரிவிப்பது ரொம்ப முக்கியம். இதை இஸ்ரவேலர்கள் கொடுத்த சமாதான பலிகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.—பிலி 4:6, 7; கொலோ 3:15.
ஜெபம் செய்யும்போது குறிப்பாக என்னென்ன விஷயங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லலாம்?—1தெ 5:17, 18
யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுவது ஏன் நல்லது?
ஒருவர் எந்த விதத்தில் ‘பேய்களின் மேஜையில்’ சாப்பிட வாய்ப்பிருக்கிறது? அவர் யெகோவாவுக்கு நன்றி காட்டவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?—1கொ 10:20, 21