கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்காக இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற சிற்றேடும் புத்தகமும் கிடைத்திருப்பதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். இதைப் பயன்படுத்தி நிறைய பேரை சீஷர்களாக ஆக்குவதற்கு உதவ சொல்லி நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். (மத் 28:18-20; 1கொ 3:6-9) இந்த இரண்டையும் நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
எப்போதும் போல் படிப்பை நடத்தாமல், படிப்பவரிடம் நிறைய கலந்துபேசுவோம். இந்த விதத்தில் தான் இந்தப் புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படிப்புக்காகத் தயாரிக்கும்போதும் அதை நடத்தும்போதும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.a
பாடத்தைப் படியுங்கள். அதிலிருக்கும் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்
“வாசியுங்கள்” வசனங்களைப் படியுங்கள். அவற்றில் இருப்பதுபோல் செய்வதற்கு மாணவருக்கு உதவுங்கள்
வீடியோக்களைப் பாருங்கள். அதனோடு சம்பந்தப்பட்ட கேள்விகள் ஏதாவது இருந்தால் அதை கலந்துபேசுங்கள்
ஒரு பாடத்தை ஒரே தடவையில் முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்
ஊழியம் செய்யும்போது, ஒருவருக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் சிற்றேட்டைக் கொடுங்கள். (பக்கம் 16-ல் இருக்கிற “முதல் சந்திப்பில் இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற சிற்றேட்டை எப்படிக் கொடுப்பது” என்ற பெட்டியைப் பாருங்கள்.) சிற்றேட்டை முடித்த பிறகு, தொடர்ந்து படிப்பதற்கு அவருக்கு ஆர்வம் இருந்தால் புத்தகத்தைக் கொடுத்து 4-வது பாடத்திலிருந்து படிப்பை ஆரம்பியுங்கள். ஏற்கெனவே பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தில் இருந்தோ கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் புத்தகத்தில் இருந்தோ படிப்பை நடத்திக்கொண்டிருந்தால், அதை நிறுத்திவிட்டு இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து நடத்துங்கள். ஆனால், எந்தப் பாடத்திலிருந்து ஆரம்பிப்பது என்பதை யோசித்து முடிவெடுங்கள்.
பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
இந்தப் புதிய புத்தகத்திலிருந்து மாணவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்?
இந்த வீடியோவை மாணவர்களுக்கு ஏன் காட்ட வேண்டும்?
படிப்படியாக என்னென்ன குறிக்கோள்களை வைக்க சொல்லி மாணவர்களை உற்சாகப்படுத்தலாம்?—பக்கம் 16-ல் இருக்கிற “ஒவ்வொரு பகுதியின் முக்கிய விஷயங்களும் குறிக்கோள்களும்” என்ற பட்டியலைப் பாருங்கள்.
a குறிப்பு: படிப்பு நடத்தும்போது “அலசிப்பாருங்கள்” பகுதியை கலந்துபேசலாமா வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்யலாம். ஆனாலும், தயாரிக்கும்போது அதிலிருக்கும் எல்லா தகவல்களையும் படியுங்கள், பாருங்கள். அப்போது, மாணவருக்கு எந்த விஷயம் உதவியாக இருக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும். எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி படித்தால், எல்லா வீடியோக்களுக்கும் கட்டுரைகளுக்கும் லிங்க் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனிப்பீர்கள்.
ஒவ்வொரு பகுதியின் முக்கிய விஷயங்களும் குறிக்கோள்களும் |
|||
---|---|---|---|
பாடங்கள் |
முக்கிய விஷயங்கள் |
மாணவரின் குறிக்கோள்கள் |
|
01-12 |
பைபிள் எப்படி உங்களுக்கு உதவி செய்யும்... பைபிளின் ஆசிரியர் யார்... என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் |
பைபிளைப் படிப்பதற்கும், படிப்புக்காகத் தயாரிப்பதற்கும், கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் மாணவரை உற்சாகப்படுத்துங்கள் |
|
13-33 |
கடவுள் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்... அவரை நாம் எப்படி வணங்கினால் அதை ஏற்றுக்கொள்கிறார்... என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் |
கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதற்கும், பிரஸ்தாபியாக ஆவதற்கும் உற்சாகப்படுத்துங்கள் |
|
34-47 |
கடவுள் தன்னை வணங்குகிறவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள் |
யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் ஊக்கப்படுத்துங்கள் |
|
48-60 |
இன்றும் என்றும் கடவுளுக்குப் பிரியமானவர்களாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள் |
சரி எது தவறு எது என்று பிரித்துப் பார்ப்பதற்கும் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் உதவுங்கள் |