பைபிளில் இருக்கும் புதையல்கள்
‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எதையாவது செய்துவிடுகிறீர்களா?
தாவீது நியாயமாக உதவி கேட்டார், ஆனால் அவரையும் அவருடைய ஆட்களையும் நாபால் அவமானப்படுத்தினான் (1சா 25:7-11; ia பக். 78 பாரா. 10-12)
தாவீது அவசரப்பட்டு, நாபால் வீட்டில் இருக்கும் எல்லா ஆண்களையும் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார் (1சா 25:13, 21, 22)
தாவீதுமேல் கொலைப்பழி விழாமல் இருக்க அபிகாயில் உதவி செய்தாள் (1சா 25:25, 26, 32, 33; ia பக். 80 பாரா 18)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கோபம் வர்றப்போ, கடைக்கு போறப்போ, சோர்வா இருக்குறப்போ “எடுத்தேன் கவிழ்த்தேன்”னு ஏதாவது முடிவெடுக்குறேனா? இல்லன்னா, நிறுத்தி நிதானமா பின்விளைவுகள பத்தி யோசிச்சு முடிவெடுக்குறேனா?’—நீதி 15:28; 22:3.