பைபிளில் இருக்கும் புதையல்கள்
இரண்டு தூண்கள் நமக்கு சொல்லும் பாடம்
ஆலயத்தின் நுழைவு மண்டபத்துக்கு முன்பு இரண்டு தூண்கள் கட்டப்பட்டிருந்தன (1ரா 7:15, 16; w13-E 12/1 பக். 13 பாரா 3)
அந்தத் தூண்களுக்கு அர்த்தமுள்ள பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன (1ரா 7:21; it-1-E 348)
யெகோவா ஆலயத்தை ‘உறுதியாய் நிலைநாட்ட’ வேண்டும் என்றால் மக்கள் அவரையே நம்பியிருக்க வேண்டியிருந்தது (1ரா 7:21, அடிக்குறிப்பு; சங் 127:1)
ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக, பல தடைகளைத் தாண்டிவர யெகோவா நமக்கு உதவியிருக்கலாம். ஆனால், ‘விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு’ நாம் தொடர்ந்து அவரையே நம்பியிருக்க வேண்டும்.—1கொ 16:13.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவையே நம்பியிருக்கிறத நான் எப்படி காட்டுறேன்?’