உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp22 எண் 1 பக். 6-7
  • 1 | பாரபட்சம் பார்க்காதீர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1 | பாரபட்சம் பார்க்காதீர்கள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் போதனை:
  • போதனையின் அர்த்தம்:
  • நீங்கள் இப்படிச் செய்யலாம்:
  • தீத்து—‘உங்களுக்காகச் செய்யும் தொண்டில் உடனுழைப்பாளி’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • பைபிள் புத்தக எண் 56—தீத்து
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • 3 | மனதிலிருந்து வெறுப்பை தூக்கி எறியுங்கள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
wp22 எண் 1 பக். 6-7
கருப்பு இனத்தை சேர்ந்த ஒருவரின் கையில், வெள்ளைக்காரர் ஒருவரின் ஃபோட்டோ இருக்கிறது. வெள்ளைக்காரர் ஒருவரின் கையில், கருப்பு இனத்தை சேர்ந்த ஒருவரின் ஃபோட்டோ இருக்கிறது. கோபமாக இருக்கும் சிலரின் ஃபோட்டோகள் பின்னால் மாட்டப்பட்டிருக்கின்றன.

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

1 | பாரபட்சம் பார்க்காதீர்கள்

பைபிள் போதனை:

“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . , அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.

போதனையின் அர்த்தம்:

நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நம்முடைய இனம், தேசம், நிறம், கலாச்சாரம் ஆகியவற்றை வைத்து யெகோவாa தேவன் முடிவு செய்வது கிடையாது. நாம் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதைத்தான் அவர் பார்க்கிறார். “மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்” என்று அவரே சொல்லியிருக்கிறார்.—1 சாமுவேல் 16:7.

நீங்கள் இப்படிச் செய்யலாம்:

ஒருவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் படிக்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், கடவுளை மாதிரியே நம்மாலும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள முடியும். ஒரு நபரைப் பார்க்கும்போது, ‘அவர் இந்த இனத்தை சேர்ந்தவர்... இந்த தேசத்தை சேர்ந்தவர்...’ என்று பார்க்காமல் அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்று பாருங்கள். ஒருவர்மேல் உங்களுக்குத் தப்பெண்ணம் இருப்பது தெரியவந்தால், அந்த எண்ணத்தை எடுத்துப்போட கடவுளிடம் உதவி கேட்டு வேண்டுங்கள். (சங்கீதம் 139:23, 24) பாரபட்சம் பார்க்காமல் இருப்பதற்கு உதவ சொல்லி யெகோவாவிடம் உருக்கமாக வேண்டினால் அவர் உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வார்.—1 பேதுரு 3:12.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.

“அதுவரைக்கும் ஒரு வெள்ளைக்காரர் பக்கத்துலகூட நான் உட்கார்ந்தது இல்ல . . . உலகம் முழுசும் இருக்கிற ஒரு பெரிய குடும்பத்துல இப்போ நானும் ஒருத்தனா இருக்கேன்.”—டைட்டஸ்

எப்படி மாறினார்...—டைட்டஸ்

வெறுப்பு சங்கிலியை உடைத்து எறிந்தார்

டைட்டஸ்.

வெறித்தனமான ரவுடி கும்பலில் டைட்டஸும் ஒருவர்! வெவ்வேறு இனங்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திய சட்டங்களுக்கு எதிராக டைட்டஸும் அவருடைய கும்பலில் இருந்த எல்லாரும் போராடினார்கள். “எங்க ஊர்ல ஹோட்டல், பார் மாதிரி இடங்களுக்கு கருப்பு இனத்த சேர்ந்தவங்கள வரவிட மாட்டாங்க. ஆனா நாங்க, அங்க சண்ட போடுறதுக்குனே போவோம். ஏதாவது வாக்குவாதம்னா, அங்க விழுற முதல் குத்து என்னோடதாதான் இருக்கும். அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி!” என்று டைட்டஸ் சொல்கிறார். டைட்டஸுக்குள் வெறுப்பு நெருப்பாக எரிந்துகொண்டு இருந்ததால்தான் இப்படி நடந்துகொண்டதாக அவரே ஒத்துக்கொள்கிறார்.

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்ததற்குப் பிறகு டைட்டஸின் வாழ்க்கை மாறியது. பைபிளைப் படிக்கப் படிக்க அவர் யோசிக்கும் விதமே மாறியது. எதிர்காலத்தில் “மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்ற வாக்குறுதி அவருடைய மனதைத் தொட்டது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.

தன் மனதில் இருந்த வெறுப்பை எடுத்துப்போட டைட்டஸ் ஆரம்பத்தில் போராடினார். “நான் யோசிக்கிற விதத்தையும் நடந்துக்குற விதத்தையும் மாத்திக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று அவரே சொல்கிறார். ஆனால், அப்போஸ்தலர் 10:34, 35-ல் கடவுள் பாரபட்சம் பார்க்காதவர் என்று படித்தது தன்னையே மாற்றிக்கொள்ள அவருக்கு உதவியது.

டைட்டஸ் சொல்கிறார்: “இனம், நிறம்னு எந்த வித்தியாசமும் பாக்காம எல்லார்கிட்டயும் யெகோவாவின் சாட்சிகள் அன்பு காட்றாங்க. இத பாத்தப்போ இவங்க மதம்தான் உண்மையான மதம்ங்குறத புரிஞ்சிகிட்டேன். நான் ஞானஸ்நானம் எடுக்குறதுக்கு முன்னாடியே சபையில இருந்த வெள்ளக்கார சகோதரர் ஒருத்தர் அவரோட வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்டாரு. அது ஒரு கனவு மாதிரி இருந்துச்சு! அதுவரைக்கும் ஒரு வெள்ளக்காரர் பக்கத்துலகூட நான் உட்கார்ந்தது இல்ல. ஆனா, அன்னைக்கு அவரோட வீட்டுல ஒண்ணா சேர்ந்து சாப்டோம். உலகம் முழுசும் இருக்கிற ஒரு பெரிய குடும்பத்துல இப்போ நானும் ஒருத்தனா இருக்கேன்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்