உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp22 எண் 1 பக். 10-11
  • 3 | மனதிலிருந்து வெறுப்பை தூக்கி எறியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 3 | மனதிலிருந்து வெறுப்பை தூக்கி எறியுங்கள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் போதனை:
  • போதனையின் அர்த்தம்:
  • நீங்கள் இப்படிச் செய்யலாம்:
  • ஸ்தேவான்—‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவர்’
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • வெறுப்பை வெல்ல முடியும்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
wp22 எண் 1 பக். 10-11
ஒரு நபர், வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவரோடு கைகளை குலுக்குவதுபோல் கற்பனை செய்துகொண்டிருக்கிறார். ஆனால், போராட்டம் செய்ய பயன்படுத்தும் அட்டைகளை பிடித்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதுபோல் அவர்களுடைய நிழலில் தெரிகிறது.

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

3 | மனதிலிருந்து வெறுப்பை தூக்கி எறியுங்கள்

பைபிள் போதனை:

“நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.”—ரோமர் 12:2.

போதனையின் அர்த்தம்:

நாம் எப்படி யோசிக்கிறோம் என்பதை கடவுள் முக்கியமாக பார்க்கிறார். (எரேமியா 17:10) வெறுப்பை காட்டுவதுபோல் நாம் எதுவும் பேசவோ செய்யவோ கூடாது என்பது உண்மைதான். இருந்தாலும், அது மட்டுமே போதாது! ஏனென்றால், வெறுப்பு என்பது நம்முடைய இதயத்தில் முளைக்கிறது. அதனால், நம் எண்ணங்களில்கூட வெறுப்பு இருக்கக்கூடாது. அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் உண்மையிலேயே நாம் நம்மையே ‘மாற்றிக்கொள்கிறோம்’ என்றும் வெறுப்பு சங்கிலியை அறுத்து எறிகிறோம் என்றும் அர்த்தம்.

நீங்கள் இப்படிச் செய்யலாம்:

வேறு இனத்தையோ நாட்டையோ சேர்ந்த மக்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறீர்கள் என்பதை யோசித்து பாருங்கள். “நான் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறேன்? அவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியுமோ அதை வைத்து நான் அப்படி நினைக்கிறேனா? அல்லது, பரவலாக இருக்கிற கருத்துக்களை வைத்து அப்படி நினைக்கிறேனா?” என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிடுகிற படங்களையும் பொழுதுபோக்குகளையும் தவிர்த்திடுங்கள். அதுமாதிரியான தகவல்கள் சோஷியல் மீடியாவில் இருந்தால் அதையும் படிக்காதீர்கள்.

இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் வெறுப்பை எடுத்துப்போட பைபிள் உதவும்

நம் யோசனைகளை நேர்மையாக எடைபோட்டு பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால், “இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறிய” பைபிள் நமக்கு உதவும். (எபிரெயர் 4:12) அதனால், பைபிளை நன்றாகப் படியுங்கள். உங்களுடைய எண்ணங்கள் பைபிள் போதனைகளோடு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால், அதன்படி யோசிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். மனதிலும் இதயத்திலும் ‘ஆழமாக வேரூன்றிய’ வெறுப்பை எடுத்துப்போட பைபிள் கண்டிப்பாக உதவும்.—2 கொரிந்தியர் 10:4, 5.

எப்படி மாறினார்...—ஸ்டீவன்

யோசிக்கும் விதத்தை மாற்றினார்

ஸ்டீவன்.

ஸ்டீவனும் அவருடைய குடும்பமும் வெள்ளைக்காரர்களுடைய வெறுப்புக்கு ஆளானார்கள். அதனால், மக்கள் உரிமைக்காக போராடிய ஒரு அமைப்புடன் சேர்ந்து ஸ்டீவன் போராட நினைத்தார். வெறுப்பால் தூண்டப்பட்டு அவரே நிறைய குற்றங்கள் செய்தார். அதைப் பற்றி ஸ்டீவன் இப்படி சொல்கிறார்: “ஒரு தடவ நானும் என் நண்பர்களும் படம் பாக்க போனோம். அமெரிக்கால வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு அந்த படத்துல பாத்தோம். அந்த அநியாயத்த என்னால பொறுத்துக்கவே முடியல. பயங்கர கோபம் வந்துச்சு. அதனால, தியேட்டருக்கு வந்திருந்த வெள்ளக்கார பசங்களை போட்டு அடிச்சோம். அப்புறம், வெள்ளக்காரங்க எங்க குடியிருக்காங்கனு தேடி போய் அவங்களயும் அடிச்சோம்.”

யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு ஸ்டீவன் யோசித்த விதமே மாறிவிட்டது. “வேற இனத்த சேர்ந்த மக்கள தப்பாவே பாக்குற ஒரு சமுதாயத்துல நான் வளர்ந்தனால யெகோவாவின் சாட்சிகள் நடந்துக்குறத பாத்தப்போ ஆச்சரியமா இருந்துச்சு. யெகோவாவின் சாட்சியா இருந்த வெள்ளகாரர் ஒருத்தர், ஒருதடவ வெளிநாட்டுக்கு போகும்போது அவரோட பிள்ளைங்கள கருப்பு இனத்த சேர்ந்த குடும்பத்தோட தங்க வெச்சாரு. அப்புறம், கருப்பு இனத்த சேர்ந்த ஒரு பையனுக்கு தங்க இடம் இல்லாம போனபோ வெள்ளை இனத்த சேர்ந்த ஒரு குடும்பம் அவன அவங்க வீட்டுல தங்க வெச்சாங்க” என்கிறார் ஸ்டீவன். உண்மை கிறிஸ்தவர்களிடம் எப்படிப்பட்ட அன்பு இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னாரோ அதே அன்பு யெகோவாவின் சாட்சிகளிடம் இருப்பதை ஸ்டீவன் பார்த்தார்.—யோவான் 13:35.

வெறுப்பை விட்டுத்தள்ள ஸ்டீவனுக்கு எது உதவியது? ரோமர் 12:2-ல் இருக்கிற வசனம்தான்! “யோசிக்கிற விதத்த மாத்தணும்ங்குறத நான் புரிஞ்சிக்கிட்டேன். மத்தவங்ககிட்ட கோபப்படாம அன்பா நடந்துக்கிட்டா மட்டும் போதாது; இப்படி வாழ்றதுதான் சிறந்த வாழ்க்கைனு புரிஞ்சுக்கிட்டு அதை ஏத்துக்கவும் வேண்டியிருந்தது” என்று அவர் சொல்கிறார். இப்போது, நாற்பது வருஷங்களுக்கும் மேல் எந்த வெறுப்பும் இல்லாமல் ஸ்டீவன் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

ஸ்டீவனின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, காவற்கோபுரம், ஜூலை 1, 2015-ஐப் பாருங்கள். இதை jw.org-ல் பார்க்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்