உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp24 எண் 1 பக். 3
  • நம் மனதைக் குடையும் கேள்வி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் மனதைக் குடையும் கேள்வி
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
  • இதே தகவல்
  • விசுவாசத்தோடு இருங்கள் ஞானமான தீர்மானம் எடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • அறிமுகம்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
wp24 எண் 1 பக். 3
அட்டைப் படத்தில் இருக்கும் அந்த வாலிபர், ஒரு வனத்துறை அதிகாரியிடம் வழி கேட்கிறார். அந்த அதிகாரி ஒரு வரைபடத்தைக் காட்டி, மலை உச்சிக்குப் போகும் வழியை அவருக்கு விளக்குகிறார்.

நம் மனதைக் குடையும் கேள்வி

முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு நீங்கள் போவதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த இடத்துக்கு நீங்கள் எப்படிப் போவீர்கள்?

  1. 1. நீங்களாகவே குத்துமதிப்பாக ஒரு வழியில் போவீர்களா?

  2. 2. நிறைய பேர் எந்த வழியில் போகிறார்களோ அதில் போவீர்களா?

  3. 3. கூகுள் மேப்பை பார்த்து அல்லது அந்த இடத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டு போவீர்களா?

முதல் இரண்டு வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் நீங்கள் நினைத்த இடத்துக்குத்தான் போவீர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் நீங்கள் போக வேண்டிய இடத்துக்குக் கண்டிப்பாகப் போவீர்கள்.

நம் வாழ்க்கையும் ஒரு பயணம்தான். அந்தப் பயணம், சந்தோஷமான எதிர்காலத்துக்குப் போய் சேர வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். அந்த ஆசை நிறைவேறுமா இல்லையா என்பது, வாழ்க்கையில் நாம் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.

வாழ்க்கையில் நாம் எடுக்கும் சில முடிவுகள் ரொம்பவே முக்கியமானது. அதனால், அந்த விஷயங்களில் முடிவு எடுக்கும்போது எது சரி, எது தவறு என்றெல்லாம் நாம் யோசிப்போம். அந்த முடிவுகளால் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, அதன் விளைவுகளை நாமும் நமக்கு வேண்டியவர்களும் ரொம்பக் காலத்துக்கு அனுபவிப்போம். அந்த மாதிரி சில முக்கியமான விஷயங்கள் இதோ:

  • கல்யாணம், செக்ஸ்

  • நேர்மையாக நடந்துகொள்வது, வேலை, பணம்

  • பிள்ளைகளை வளர்ப்பது

  • மற்றவர்களை நடத்தும் விதம்

நாமும் நம்முடைய குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இந்த விஷயங்களில் நாம் நல்ல முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும், இல்லையா?

இப்போது கேள்வி என்னவென்றால்: நல்ல முடிவுகளை எப்படி எடுப்பது?

நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் நமக்கு உதவி செய்யும். அதில் இருக்கும் விஷயங்களை நாம் தாராளமாக நம்பலாம். இதைப் பற்றித்தான் இந்தப் பத்திரிகையில் பார்க்கப்போகிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்