உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 98
  • தனிமை என்னும் சிறையை விட்டு சிறகடிக்க...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தனிமை என்னும் சிறையை விட்டு சிறகடிக்க...
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்
  • தனிமையைத் துரத்தியடிக்க—பைபிள் எப்படி உதவும்?
    வேறுசில தலைப்புகள்
  • தனிமையின் கொடுமை—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • தனிமையிலிருப்பவர்களுக்கு பைபிள் உதவக்கூடுமா?
    விழித்தெழு!—1988
  • தனிமை உங்கள் வாழ்க்கையை நிலைகுலைவிக்க அனுமதிக்காதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 98
மனம் உடைந்துபோயிருக்கும் ஒரு டீனேஜ் பெண், நட்டநடு ராத்திரியில் கைகளால் முகத்தை மூடியபடி லேப்டாப் முன் உட்கார்ந்திருக்கிறாள்.

Justin Paget/​Stone via Getty Images

தனிமை என்னும் சிறையை விட்டு சிறகடிக்க...

  •  “அமெரிக்காவில் வாழ்கிற கிட்டத்தட்ட பாதிப்பேர் தனிமை உணர்வால் வாடுவதாகச் சொல்கிறார்கள். அதில் நிறைய பேர் இளைஞர்கள்.”​—ஆர் எப்பிடமிக் ஆஃப் லோன்லினஸ் அன்ட் ஐசோலேஷன்: தி யூ.எஸ். சர்ஜென் ஜெனரல்ஸ் அட்வைசரி ஆன் தி ஹீலிங் எஃபெக்ட்ஸ் ஆஃப் சோஷியல் கனெக்‍ஷன் அன்ட் கம்யூனிட்டி, 2023.

  •  “நிறைய பேர் இப்போது தனிமை உணர்வால் வாடுகிறார்கள். அதனால், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் அதைச் சரிசெய்வதற்கும் [உலக சுகாதார அமைப்பு] ஒரு குழுவை நியமித்திருக்கிறார்கள். மற்றவர்களோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை, தனிமை உணர்வால் வாடுகிறவர்களிடம் அந்தக் குழுவில் உள்ளவர்கள் புரிய வைக்கிறார்கள். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அந்த நாடு எவ்வளவு ஏழ்மையான நாடாக இருந்தாலும் சரி, அங்கு இருப்பவர்கள் தனிமை உணர்வை விரட்டுவதற்கு நல்ல நல்ல வழிகளைக் கண்டுபிடிக்க அந்தக் குழுவில் இருப்பவர்கள் உதவி செய்கிறார்கள்.—உலக சுகாதார அமைப்பு, நவம்பர் 15, 2023.

மற்றவர்களோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் தனிமை உணர்வை விரட்டுவதற்கும் நாம் என்ன செய்யலாம் என்று பைபிள் நல்ல நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கிறது.

கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்

மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்தும் விஷயங்களை அதிகமாகச் செய்யாதீர்கள். உதாரணத்துக்கு, சோஷியல் மீடியாவை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக மக்களோடு நேரில் பழகுவதற்கும் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்கும் முயற்சி செய்யுங்கள்.

  •  பைபிள் ஆலோசனை: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புகளைத் தேடுங்கள். ஏனென்றால், மற்றவர்களுக்காக நல்ல விஷயங்களைச் செய்யும்போது அவர்களோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள முடியும். நமக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

  •  பைபிள் ஆலோசனை: “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.

நல்ல நண்பர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதைப் பற்றிய அருமையான ஆலோசனைகளைப் பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள எங்களுடைய வெப்சைட்டைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்