உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 121
  • யாரை நம்புவது?—பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யாரை நம்புவது?—பைபிள் என்ன சொல்கிறது?
  • வேறுசில தலைப்புகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பகமான ஒருவர்
  • மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கை அவசியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!
    வேறுசில தலைப்புகள்
  • சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 121
படத்தொகுப்பு: நம்பிக்கையாக இருக்க வேண்டிய ஆட்கள்: 1. மேடையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர். 2. கைகளை வணங்கியபடி நிற்கும் சர்ச் பாதிரி. 3. கையில் லெட்டர்பேடை பிடித்திருக்கும் விஞ்ஞானி.

இடது: Olena Yefremkina/stock.adobe.com; center: lunamarina/stock.adobe.com; வலது: Rido/stock.adobe.com

விழிப்புடன் இருங்கள்!

யாரை நம்புவது?—பைபிள் என்ன சொல்கிறது?

நம்பிக்கையாக இருக்க வேண்டிய ஆட்களே ஏமாற்றும்போது மக்கள் உடைந்துபோகிறார்கள். நிறைய பேர் இவர்களை நம்புவதையே நிறுத்திவிட்டார்கள்:

  •  மக்களுடைய நலனில் அக்கறை காட்டாத சுயநலமான அரசியல் தலைவர்கள்.

  •  உண்மைகளை மூடிமறைக்கும் மீடியாக்கள்.

  •  மக்களுக்கு வேண்டிய நல்லதைச் செய்யாத விஞ்ஞானிகள்.

  •  கடவுளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதற்குப் பதிலாக அரசியலோடு கைகோர்த்திருக்கும் மதத் தலைவர்கள்.

நிலைமை இப்படி இருப்பதால், யாரை நம்புவது என்பதில் மக்கள் உஷாராக இருப்பது நல்லதுதான். பைபிளும் இப்படி எச்சரிக்கிறது:

  •  “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.”—சங்கீதம் 146:3.

நம்பகமான ஒருவர்

 நீங்கள் தாராளமாக நம்ப முடிந்த ஒருவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் வெறுமனே ரொம்பக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த நல்ல மனிதர் மட்டும் கிடையாது. அவரை கடவுள் “ராஜாவாக” நியமித்திருக்கிறார். அவருடைய “ஆட்சிக்கு முடிவே இருக்காது.” (லூக்கா 1:32, 33) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு, இப்போது பரலோகத்தில் தன் ஆட்சியை ஆரம்பித்துவிட்டார்.—மத்தேயு 6:10.

  •  இயேசுவை ஏன் நம்பலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரைகளைப் பாருங்கள்: “கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்?” மற்றும் “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?”

நம்பகமான புத்தகம்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் இன்னும் நிறைய முக்கியமான விஷயங்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. பைபிளில் இருக்கும் முத்தான விஷயங்கள் எல்லாமே நம்பகமானது. அவற்றைத் தெரிந்துகொள்ள உங்களை அன்பாக வரவேற்கிறோம். இலவச பைபிள் படிப்பு திட்டம் என்ற லிங்கில் உங்களுடைய விவரங்களை நீங்கள் கொடுக்கலாம். பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் பிரசுரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க ஒரு நபரும் உங்களை வந்து சந்திப்பார். இயேசு எப்படிப்பட்டவர், அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.

எங்களோடு பைபிளைப் படித்துப் பாருங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்