உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 24
  • உலக சமாதானம்—ஏன் இன்னும் கிடைத்த பாடில்லை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக சமாதானம்—ஏன் இன்னும் கிடைத்த பாடில்லை?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • மக்களால் ஏன் சமாதானமாக இருக்க முடியவில்லை?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • பைபிள் தரும் பதில்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 24
போர் விமானம்

உலக சமாதானம்—ஏன் இன்னும் கிடைத்த பாடில்லை?

பைபிள் தரும் பதில்

உலக சமாதானத்திற்காக மனிதர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்திருக்கின்றன, இனிமேலும் படுதோல்விதான் அடையப்போகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன:

  • “மனுஷனுக்கு . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.” (எரேமியா 10:23) தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்கிற திறமையுடனோ உரிமையுடனோ மனிதர்கள் படைக்கப்படவில்லை, அதனால் நிலையான சமாதானத்தை அவர்களால் அடைய முடியாது.

  • “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது. அவர்களுடைய உயிர்சக்தி போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள். அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.” (சங்கீதம் 146:3, 4) மிகச் சிறந்த நோக்கத்தோடு செயல்படுகிற அரசாங்கத் தலைவர்களால்கூட, போருக்கான அடிப்படைக் காரணங்களுக்கு நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது.

  • “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் . . . ஏனென்றால், மனிதர்கள் . . . கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:1-4) இந்தப் பொல்லாத உலகத்தின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்துவருகிறோம்; இந்தக் காலப்பகுதியில் இருக்கிற ஜனங்களுடைய மனப்பான்மை இந்தளவு மோசமாக இருப்பதால் சமாதானம் கிடைப்பது ரொம்பவே கஷ்டம்.

  • “பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்.” (வெளிப்படுத்துதல் 12:12) கடவுளுடைய எதிரியான பிசாசு பூமிக்குத் தள்ளப்பட்டிருக்கிறான், தன்னுடைய கொடூர குணங்களைப் பின்பற்றுவதற்கு மக்களை அவன் தூண்டிவிடுகிறான். அவன் ‘இந்த உலகத்தை ஆளுகிறவனாக’ இருக்கும்வரை நாம் சமாதானத்தோடு வாழவே முடியாது.—யோவான் 12:31.

  • “[கடவுளுடைய அரசாங்கம்] மற்ற எல்லா ராஜ்யங்களையும் [அதாவது, கடவுளை எதிர்க்கிற எல்லா அரசாங்கங்களையும்] நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.” (தானியேல் 2:44) நிரந்தர உலக சமாதானம் வேண்டுமென்ற நம்முடைய ஆசையை எந்த மனித அரசாங்கமும் நிறைவேற்றாது, கடவுளுடைய அரசாங்கம்தான் நிறைவேற்றி வைக்கும்.—சங்கீதம் 145:16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்