இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
‘திருமணத்துக்கு முன் நோ செக்ஸ்’ என்ற உறுதிமொழியைப் பற்றி என்ன சொல்லலாம்?
உறுதிமொழி எடுக்கிற பழக்கம் எப்படி ஆரம்பித்தது?
‘திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று சிலர் உறுதிமொழி எடுக்கிறார்கள். இந்த உறுதிமொழியை அவர்கள் வாய் வழியாக சொல்கிறார்கள் அல்லது எழுதி வைத்துக்கொள்கிறார்கள்.
1990-களில், அமெரிக்காவில் இருக்கிற சதர்ன் பேப்டிஸ்ட் கன்வென்ஷன், “ட்ரூ லவ் வெய்ட்ஸ்” என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து. அந்த சமயத்தில் இருந்துதான் இப்படி உறுதிமொழி எடுப்பது பிரபலமானது. கல்யாணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு இந்த இயக்கம் இளைஞர்களை ஊக்கப்படுத்தியது. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பைபிள் நெறிமுறைகளின்படி வாழ்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு, இந்த உறுதிமொழியை காப்பாற்றுவதற்கு உதவுகிற நபர்களோடு பழகுவதற்கும் இந்த இயக்கம் உதவியது.
கொஞ்சம் நாட்களுக்கு பிறகு, இதே மாதிரி இன்னொரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு ஒரு வெள்ளி மோதிரம் கொடுக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அவர்களுடைய உறுதிமொழிக்கு அடையாளமாக (ஞாபகப்படுத்துவதற்காக) அந்த மோதிரத்தை அவர்கள் போட்டுக்கொண்டார்கள்.
உறுதிமொழி எடுப்பது உண்மையிலேயே ‘வர்க் அவுட்’ ஆகுமா?
இதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது.
ஆராய்ச்சியாளர்களான கிரிஸ்டின் சி. கிம் மற்றும் ராபர்ட் ரிக்டர் இதைப் பற்றி இப்படி சொல்கிறார்கள்: “இப்படி உறுதிமொழி எடுத்த வயதுக்கு வந்த பிள்ளைகள் அவர்களுடைய டீனேஜ் வயதில் ரொம்ப லேட்டாகவோ குறைவாகவோ செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்ததாக நிறைய அறிக்கைகள் காட்டுகின்றன.”
கட்மாக்கர் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை இப்படி சொன்னது: “உறுதிமொழி எடுத்துக்கொண்ட டீனேஜ் பிள்ளைகளும் உறுதிமொழி எடுக்காத டீனேஜ் பிள்ளைகள் மாதிரியேதான் செக்ஸ் வைத்துக்கொண்டார்கள் என்று தெரிய வருகிறது.”
ஏன் இப்படி வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன?
ஏனென்றால், செக்ஸை பற்றி இளைஞர்கள் இடையில் வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. சிலர் கற்புடன் இருப்பதை ரொம்ப முக்கியமாக நினைக்கிறார்கள். ஆனால், வேறு சிலர் அப்படி நினைப்பது இல்லை.
இந்த ஆராய்ச்சிகளில் என்னென்ன விஷயங்களை எல்லாம் கண்டுபிடித்தார்கள்? ஐந்து வருஷங்களுக்கு பிறகு, “உறுதிமொழி எடுத்த இளைஞர்களுக்கும் உறுதிமொழி எடுக்காத இளைஞர்களுக்கும் இடையே செக்ஸ் சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்களில் எந்த வித்தியாசமும் இல்லை” என்று டாக்டர் ஜானெட் ரோஸன்பாம் சொல்கிறார். இவர் பருவ வயது பிள்ளைகளுடைய ஆரோக்கிய நிபுணராக இருக்கிறார்.
ஒரு நல்ல தீர்வு
கற்போடு இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள் ஒரு நல்ல லட்சியத்தோடுதான் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த உறுதிமொழியை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு தேவையான நெறிமுறைகளை இந்த இயக்கங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. கற்போடு இருப்பதாக உறுதிமொழி எடுக்கிறவர்கள் “அதை உண்மையிலேயே மனதார எடுப்பது இல்லை. . . . ஏதோ ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பதற்கு ஒரு இயக்கத்தில் சேர்ந்தால் மட்டும் போதாது. அந்த விஷயத்தை செய்யக்கூடாது என்ற உறுதி அந்த நபருக்குள் இருக்க வேண்டும்” என்று டாக்டர் ரோஸன்பாம் சொல்கிறார்.
வாயால் சொல்லப்படுகிற அல்லது எழுதி வைக்கப்படுகிற உறுதிமொழியைப் போல் இல்லாமல், ஒரு நபர் உண்மையிலேயே உறுதியோடு இருப்பதற்கு பைபிள் உதவும். ‘சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க நம்முடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்த’ அது உதவி செய்யும். (எபிரெயர் 5:14) சொல்லப்போனால், கற்போடு இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதற்கான காரணம், வெறுமனே சில நோய்கள் வருவதை தடுக்கவோ தேவையில்லாமல் கர்ப்பமாகாமல் இருக்கவோ கிடையாது. திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவருக்கு மரியாதை கொடுப்பதற்காகத்தான்!—மத்தேயு 5:19; 19:4-6.
பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் எல்லாமே நம்முடைய நல்லதுக்காகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. (ஏசாயா 48:17) நாம் யாராக இருந்தாலும் சரி, நமக்கு என்ன வயதானாலும் சரி, “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று கடவுள் கொடுத்திருக்கிற கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதில் நம்மால் உறுதியாக இருக்க முடியும். (1 கொரிந்தியர் 6:18) அப்படிப்பட்டவர்கள் கல்யாணம் செய்துகொண்ட பிறகு, செக்ஸால் கிடைக்கும் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொள்வதால் வரும் வலியோ வேதனையோ இல்லாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்!