கன்னித்தன்மை—ஏன்?
“கன்னித்தன்மை கொள்கையினர்”—தங்களுக்கு வயதாகும்வரை பாலின நடவடிக்கையை ஒத்திப்போடுவதற்கு பருவ வயதினரிடையே வளர்ந்துவருவதாகத் தோன்றும் நவீன பாணியை, கொலம்பியா யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பார்னார்ட் காலேஜில் மதத்துறை இணைப் பேராசிரியரான, ரான்டல் பால்மர் அவ்விதமே அழைத்தார்.
பாலுறவிலிருந்து விலகியிருக்கும்படியாக அதிகமான வற்புறுத்துதல் மத அமைப்புகளிடமிருந்து வருவது ஆச்சரியமளிப்பதாயில்லை. “ஆனால் கன்னித்தன்மை கொள்கையினரின் நோக்கம், மத சார்பற்றது, மதரீதியானதல்ல,” என்று டாக்டர் பால்மர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். “ஒரு கன்னியாகவே இருப்பதற்கு மெய்யான தூண்டுதல், பயமாகும்—தெய்வீக தண்டனைக்கான பயமல்ல, ஆனால் மரணத்துக்கேதுவான நோயைக் குறித்த பயமாகும்.” இவ்வாறு, ஒரு மதத்தினுடைய தராதரத்தின் காரணமாக விலகியிருப்பதாய்ச் சித்தரிக்கும் “கன்னி மரியாள் கொள்கையினரை,” அதிகமாக ஓர் உடல்நலப் பிரச்சினையின் காரணமாகவே விலகியிருக்கும் நவீன நாளைய “கன்னித்தன்மை கொள்கையினரோடு” முரண்படுத்திக் காட்டுகிறார்.
“நோயைக் குறித்த பயம் ஒழுக்கநெறியைக் கட்டுப்படுத்துவது, 1990-களில் மதத்தின் நிலையைப் பற்றிய ஒரு வருந்தத்தக்க வர்ணனையாகும்” என்று டாக்டர் பால்மர் தொடருகிறார். “மதத் தலைவர்கள், புண்படுத்துவதைத் தவிர்ப்பதில் அவ்வளவு ஆவலுடன், ஒரு பயனுமில்லாத, ஒழுக்கநெறியை அளித்துள்ளனர், அல்லது எந்தவித ஒழுக்கநெறியையும் அளிக்காதிருக்கின்றனர். ஆகவே தங்கள் பாலின வாழ்வை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை வளர் இளம் பருவத்தினருக்கு அளிப்பது விஞ்ஞானிகளுக்கும் மக்கள் நலவாழ்வு அதிகாரிகளுக்கும் விடப்படுகிறது.”
என்றபோதிலும், உண்மையான கிறிஸ்தவர்களின் விஷயத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக வளர்க்கப்பட்டவராய் இருந்த பருவ வயது சாத்தை எண்ணிப்பாருங்கள். சாத்தை ஒரு பெண்பிள்ளை அணுகி, ஓர் உரையாடலைத் துவக்கினாள். ஆனால் அவளது நோக்கம் வெறுமனே பேசுவதற்கும் மேலாக இருந்தது விரைவில் தெளிவானது. “அப்போது எனக்குத் தோன்றியது, நான் யெகோவாவை ஏமாற்றமடையச் செய்ய முடியாது. யெகோவாவை எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் கொண்டவனாய், நான் போகவேண்டும் என்று அவளிடம் சொல்லிவிட்டேன்” என்று சாத் கூறுகிறார்.
சாத்தைப் போலவே, யெகோவாவின் சாட்சிகளுக்கு மத்தியிலுள்ள பல இளைஞர் நல்ல உடல்நலத்துக்காக மட்டுமின்றி, முதலாவதாக தங்கள் சிருஷ்டிகரான, யெகோவா தேவனை மகிழ்விக்கும்படியாக நல்ல ஒழுக்கநெறிகளைக் காத்துவருகின்றனர். நோயைப் பற்றிய பயம் அவர்களின் ஒழுக்கநெறியை வழிநடத்தும் செல்வாக்காயில்லை. மாறாக, அப்படிப்பட்ட இளைஞர், “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்ற பிரசங்கி 12:1-ன் ஆலோசனையைப் பின்பற்றுகின்றனர்.