உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwyp கட்டுரை 82
  • நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?
  • இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நேரத்தை ஏன் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்?
  • நீங்கள் என்ன செய்யலாம்
  • காலந்தாழ்த்துதல் காலத்திருடன்
    விழித்தெழு!—1995
  • என் நேரத்தைத் திட்டமிட்டுச் செலவிடுவது எப்படி?
    விழித்தெழு!—2009
  • நேரம் நீங்கள் அதன் அதிகாரியா அல்லது அதன் அடிமையா?
    விழித்தெழு!—1988
  • ஹோம்வர்க் செய்ய நேரமில்லையே, என்ன செய்வது?
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
ijwyp கட்டுரை 82
ஒரு டீனேஜ் பையன் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு முன்பே கால்பந்து விளையாடுகிறான், டிவி பார்க்கிறான். இப்படி நேரத்தைத் திட்டமிடாததால் கவலையில் இருக்கிறான்

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?

  • நேரத்தை ஏன் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்?

  • நீங்கள் என்ன செய்யலாம்

  • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

நேரத்தை ஏன் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்?

  • நேரமும் பணம் மாதிரிதான். அதை வீணாக்கிவிட்டால், தேவைப்படும்போது உங்களிடம் இருக்காது. ஆனால், நேரத்தை நன்றாகத் திட்டமிட்டு பயன்படுத்தினால், உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு கொஞ்சம் நேரம் மிச்சமிருக்கும்!

    பைபிள் நியமம்: “சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை. ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.”​—நீதிமொழிகள் 13:4.

    உண்மை: நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும்போது உங்களுக்கு கொஞ்சம் அல்ல, நிறைய சுதந்திரம் கிடைக்கும்.

  • நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும் கலையை நீங்கள் இப்போதே கற்றுக்கொண்டால், பெரியவர்களாக ஆன பிறகும் அது உங்களுக்குக் கைகொடுக்கும். உங்களுடைய வேலை தொடர்ந்து இருப்பதும் பறிபோவதும், நேரத்தை நீங்கள் எந்தளவு திட்டமிட்டு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், வேலைக்கு எப்போதுமே தாமதமாக வருபவரை நீங்கள் வேலையில் வைப்பீர்களா?

    பைபிள் நியமம்: “சின்ன விஷயத்தில் உண்மையுள்ளவனாக இருக்கிறவன் பெரிய விஷயத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்.”​—லூக்கா 16:10.

    உண்மை: நேரத்தை நீங்கள் எப்படித் திட்டமிட்டு பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லிவிடலாம்.

நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்துவது சுலபமல்ல என்பது உண்மைதான். அதற்குத் தடையாக இருக்கும் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

தடை #1: நண்பர்கள்

“எங்கயாவது வெளிய போகலாம்னு நண்பர்கள் கூப்பிட்டாங்கனா, எனக்கு நேரமே இல்லேனாலும் அவங்ககூட போயிடுவேன். மற்ற வேலைகளையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வேகவேகமா செஞ்சு முடிச்சிடலாம்னு நினைப்பேன். ஆனா நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்காது. எல்லாமே தப்பு தப்பாதான் நடக்கும்.”​—சிந்தியா.

தடை #2: கவனச்சிதறல்கள்

“வேக்யூம் கிளீனர் மாதிரிதான் டிவியும்! அதுல வர்ற நிகழ்ச்சிகளும் படங்களும் உங்கள அப்படியே இழுத்து வச்சுக்கும், அந்த இடத்தவிட்டு நகரவே விடாது.”​—ஐவி.

“மணிக்கணக்கா என்னோட டேப்லட்டுல எதையாவது பண்ணிட்டு இருப்பேன். சார்ஜ் எல்லாம் போய் அதுவே ஆஃப் ஆனதுக்கு அப்புறம்தான் நேரம் எல்லாம் வீணா போச்சேனு மனசு அடிச்சுக்கும்.”​—மேரி.

தடை #3: நேரத்தைத் தள்ளிப்போடுவது

“வீட்டுப்பாடங்களயும் மற்ற வேலைகளயும் அப்புறமா பார்த்துக்கலாம்னு தள்ளிபோட்டுட்டு, ஒண்ணுக்கும் உதவாத விஷயத்த செஞ்சிட்டு இருப்பேன். வேலைகள முடிச்சே ஆகணுங்கற கட்டாயம் வர்றப்போ, அவசர அவசரமா செய்வேன். இப்படி செய்றது சரியே இல்ல.”​—பெத்.

ஒரு டீனேஜ் பையன் முதலில் படிக்கிறான், பிறகு வீட்டுப்பாடங்களை முடிக்கிறான். அதனால், கால்பந்து விளையாட அவனுக்கு நேரம் கிடைக்கிறது. இப்படி நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தியதால் சந்தோஷமாக இருக்கிறான்

நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும்போது உங்களுக்கு கொஞ்சம் அல்ல, நிறைய சுதந்திரம் கிடைக்கும்

நீங்கள் என்ன செய்யலாம்

  1. முக்கியமான வேலைகளைப் பட்டியல் போடுங்கள். உதாரணத்துக்கு, வீட்டு வேலைகள் மற்றும் வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை பட்டியல் போடுங்கள். இந்த வேலைகளைச் செய்து முடிக்க ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று எழுதி வையுங்கள்.

    பைபிள் நியமம்: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”​—பிலிப்பியர் 1:​10.

  2. சும்மா இருக்கும் நேரத்தில் நீங்கள் செய்ய விரும்புவதை பட்டியல் போடுங்கள். உதாரணத்துக்கு, டிவி பார்ப்பது, சோஷியல் நெட்வர்க்கைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களுக்கு ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள்.

    பைபிள் நியமம்: “ஞானமாக நடந்துகொள்ளுங்கள்; உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”​—கொலோசெயர் 4:5.

  3. திட்டம் போடுங்கள். நீங்கள் எழுதி வைத்திருக்கும் இரண்டு பட்டியல்களையும் இப்போது பாருங்கள். முக்கியமான காரியங்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்களா? சும்மா பொழுதை போக்குகிற நேரத்திலிருந்து முக்கியமான வேலைகளுக்கு நேரத்தை வாங்க வேண்டியிருக்கிறதா?

    டிப்ஸ்: தினமும் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு பட்டியல் போடுங்கள். ஒவ்வொரு வேலையைச் செய்து முடித்த பிறகும் அந்தப் பட்டியலில் குறித்து வையுங்கள்.

    பைபிள் நியமம்: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.”​—நீதிமொழிகள் 21:5.

  4. போட்ட திட்டத்தைப் பின்பற்றுங்கள். முக்கியமான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய சமயங்களில், ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடலாம் என்று நண்பர்கள் சொன்னால், சில சமயங்களில் ‘முடியாது’ என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படிச் செய்யும்போது உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும், அதைச் சந்தோஷமாகவும் அனுபவிக்க முடியும்.

    பைபிள் நியமம்: “சுறுசுறுப்பாக இருங்கள், உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள்.”​—ரோமர் 12:11, அடிக்குறிப்பு.

  5. முதலில் கடினமாக உழையுங்கள், பிறகு ஜாலியாக இருங்கள். “சிலசமயத்துல, என்னோட பட்டியல்ல இருக்குற ரெண்டு வேலைய செஞ்சு முடிச்ச உடனே, 15 நிமிஷம் டிவி பார்த்துட்டு அதுக்கு அப்புறம் மற்ற வேலைய செய்யலாம்னு நினைப்பேன். 15 நிமிஷம் 30 நிமிஷமாகும், 30 நிமிஷம் 1 மணிநேரமாகும். நேரம் போறதே தெரியாது. கடைசியா 2 மணிநேரத்த வீணாக்கியிருப்பேன்!” என்று தாரா என்ற இளம் பெண் சொல்கிறாள்.

    இதற்கு என்ன தீர்வு? பொழுதுபோக்கு என்பது, உங்கள் வேலைகளை எல்லாம் செய்து முடித்ததற்குப் பிறகு அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம். தினசரி வாழ்க்கையில் கட்டாயம் செய்தே ஆக வேண்டிய விஷயம் அல்ல.

    பைபிள் நியமம்: “கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.”​—பிரசங்கி 2:​24.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

ஷெயின்

“எல்லாத்துக்கும் ஒரு அட்டவணைய போடுவேன். அப்போதான், என்னென்ன வேலைகள இன்னும் செய்ய வேண்டியிருக்குங்குறத அடிக்கடி பார்த்துக்க முடியும். கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து ஓய்வு எடுக்குறதுக்கும் நேரத்த ஒதுக்குவேன், அப்போதான் எனக்கு தெம்பு கிடைக்கும்! இந்த மாதிரி தெளிவான ஒரு அட்டவணைய போடுறதுனால, எந்தெந்த விஷயங்கள விட்டுக்கொடுக்க கூடாது எத கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம்னு தெரியுது.”​—ஷெயின்.

சாமுவேல்

“என்னால செய்ய முடியாத விஷயங்களுக்கு ‘முடியாது’-னு சொல்ல கத்துக்கிட்டேன். அப்படி சொல்றது கஷ்டமாதான் இருக்கும். ஆனா, சரியான காரணத்த எடுத்து சொல்றப்போ, அதாவது என்னோட முழு கவனத்தயும் கொடுக்க முடியாதனாலதான் நான் மறுக்கிறேன்னு சொல்றப்போ, யாருமே என்கிட்ட கோபப்பட்டது இல்ல.”​—சாமுவேல்.

புரூக்ளின்

“என்னோட அட்டவணையில எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்குறப்போ, தூங்குறதயும் உடற்பயிற்சி செய்றதயும்தான் தியாகம் பண்ணுவேன். ஆனா, சிலசமயத்தில கொஞ்சம் அதிகமா தூங்குனா இல்லனா உடற்பயிற்சி செஞ்சா, அடுத்த நாள் ரொம்ப சுறுசுறுப்பா சந்தோஷமா இருப்பேன். நம்மளோட உடல்நலத்த கவனிச்சிக்கிறதும் ரொம்ப முக்கியம்.”​—புரூக்ளின்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்