19 சில காலத்துக்குப் பின்பு, அதாவது இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, அந்த நோயால் அவருடைய குடல்கள் வெளியே வந்தன. அவர் கடைசிவரை பயங்கரமாகக் கஷ்டப்பட்டு இறந்துபோனார். வாசனைப் பொருள்களை எரித்து அவருடைய முன்னோர்களை அடக்கம் செய்ததுபோல், யோராமை அவருடைய மக்கள் அடக்கம் செய்யவில்லை.+