உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 4 பக். 16-பக். 17 பாரா. 2
  • கோபம் ஆபத்தானது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கோபம் ஆபத்தானது
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • எதிரும்புதிருமான மனப்பான்மைகளை வளர்த்துக்கொண்ட சகோதரர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • யெகோவா விரும்பும் பலிகளை செலுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 4 பக். 16-பக். 17 பாரா. 2
ஆபேல் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்கும்போது காயீன் கோபமாக இருக்கிறான்

பாடம் 4

கோபம் ஆபத்தானது

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே வந்த பிறகு, அவர்களுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய முதல் மகன் பெயர் காயீன். அவன் விவசாயம் செய்தான். இரண்டாவது மகன் பெயர் ஆபேல். அவன் ஆடுகளை மேய்த்தான்.

ஒருநாள், காயீனும் ஆபேலும் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள். காணிக்கை என்றால் என்ன தெரியுமா? அது கடவுளுக்குக் கொடுக்கிற ஒரு பரிசு. ஆபேல் கொடுத்த காணிக்கையைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டார். ஆனால், காயீன் கொடுத்த காணிக்கை அவருக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை. அதனால், காயீனுக்குப் பயங்கர கோபம் வந்தது. ‘இப்படிக் கோபமாக இருந்தால், ஏதாவது தப்பு செய்துவிடுவாய்’ என்று காயீனை யெகோவா எச்சரித்தார். ஆனாலும், யெகோவாவின் பேச்சை காயீன் கேட்கவில்லை.

அவன் ஆபேலிடம், ‘வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்’ என்று சொன்னான். அவர்கள் இரண்டு பேரும் தனியாக இருந்த சமயத்தில் காயீன் தன் தம்பியை அடித்து கொன்றுபோட்டான். யெகோவா காயீனுக்கு என்ன தண்டனை கொடுத்தார்? காயீனை அவனுடைய குடும்பத்தை விட்டு ரொம்பத் தூரத்துக்குத் துரத்திவிட்டார். திரும்பி வரவே கூடாது என்று சொல்லிவிட்டார்.

காட்டுப் பக்கத்தில் ஆபேலை காயீன் நெருங்குகிறான்

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நமக்குப் பிடிக்காத மாதிரி ஏதாவது நடக்கும்போது, நமக்குக் கோபம் கோபமாக வரலாம். நமக்குப் பயங்கர கோபம் வரும்போது அல்லது ‘இப்படிக் கோபப்படக் கூடாது’ என்று மற்றவர்கள் சொல்லும்போது உடனடியாக கோபத்தை அடக்க வேண்டும். அப்போதுதான், கோபத்தில் தவறு செய்துவிடாமல் இருப்போம்.

யெகோவாமேல் ஆபேல் ரொம்ப அன்பு வைத்திருந்தான். அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொண்டான். அதனால், ஆபேலை யெகோவா மறக்கவே மாட்டார். இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும்போது, ஆபேலை மறுபடியும் உயிரோடு எழுப்புவார்.

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.’—மத்தேயு 5:24

கேள்விகள்: ஆதாம், ஏவாளுடைய பிள்ளைகளின் பெயர் என்ன? காயீன் ஏன் தன் தம்பியைக் கொலை செய்தான்?

ஆதியாகமம் 4:1-12; எபிரெயர் 11:4; 1 யோவான் 3:11, 12

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்