உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 6 பக். 20-பக். 21 பாரா. 5
  • எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • தண்ணீர் ஓர் உலகத்தை வாரிக்கொண்டு போகிறது
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • நோவா கட்டிய பேழை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பெரிய ஜலப்பிரளயம்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 6 பக். 20-பக். 21 பாரா. 5
மழை கொட்டியதால், பேழை மிதக்க ஆரம்பித்தது

பாடம் 6

எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்

நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் போகிறார்கள், மிருகங்களும் பேழைக்குள் போகின்றன

நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் போகிறார்கள். மிருகங்களும் உள்ளே போகின்றன. அதன் பிறகு, யெகோவா கதவை மூடினார். அப்போது, மழை பெய்ய ஆரம்பித்தது. பயங்கரமாக மழை கொட்டியதால், அந்தப் பேழை தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. கடைசியில், எங்கே பார்த்தாலும் ஒரே தண்ணீராக இருந்தது. பேழைக்கு வெளியே இருந்த கெட்டவர்கள் எல்லாரும் செத்துப் போனார்கள். ஆனால், நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் பத்திரமாக இருந்தார்கள். யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்ததை நினைத்து அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!

ராத்திரி பகலாக 40 நாட்கள் மழை கொட்டியது. அதன் பிறகு, மழை நின்றது. பூமியிலிருந்த தண்ணீர் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. கடைசியில், அந்தப் பேழை ஒரு மலைமேல் நின்றது. ஆனாலும், வெளியே இன்னமும் நிறைய தண்ணீர் இருந்தது. அதனால், நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் வற்றியது. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் போய் ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகியிருந்தது. அப்போது, யெகோவா அவர்களைப் பேழையிலிருந்து வெளியே வரச் சொன்னார். தங்களைக் காப்பாற்றியதற்காக யெகோவாவுக்கு அவர்கள் நன்றி சொல்ல ஆசைப்பட்டார்கள். அதனால், அவருக்குப் பலி கொடுத்தார்கள்.

வானவில்

அவர்கள் கொடுத்த பலி யெகோவாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் இனி வெள்ளத்தால் அழிக்க மாட்டேன் என்று யெகோவா சத்தியம் செய்தார். அதற்கு அடையாளமாக, ஒரு வானவில்லை முதல் தடவையாக வானத்தில் வர வைத்தார். நீ வானவில்லை பார்த்திருக்கிறாயா?

யெகோவா நோவாவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும், நிறைய பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்பச் சொன்னார்.

‘நோவா பேழைக்குள் நுழைந்தார். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை [மக்கள்] கவனம் செலுத்தவே இல்லை.’—மத்தேயு 24:38, 39

கேள்விகள்: பேழையின் கதவை யெகோவா மூடிய பிறகு என்ன நடந்தது? வானவில்லைப் பார்க்கும்போது நமக்கு எது ஞாபகத்துக்கு வரும்?

ஆதியாகமம் 7:1–9:17

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்