பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆமோஸ் 1-9
‘யெகோவாவைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்’
யெகோவாவைத் தேடுவது என்பதன் அர்த்தம் என்ன?
நாம் தொடர்ந்து யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அவருடைய தராதரங்களின்படி வாழ வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம்
இஸ்ரவேலர்கள் யெகோவாவைத் தேடாதபோது அவர்களுக்கு என்ன நடந்தது?
‘கெட்டதை வெறுக்காமலும், நல்லதை நேசிக்காமலும்’ போய்விட்டார்கள்
தங்களுக்குப் பிரியமாக நடப்பதிலேயே குறியாக இருந்தார்கள்
யெகோவாவின் அறிவுரைகளை அசட்டை செய்தார்கள்
தன்னைத் தேடுவதற்காக யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார்?