இளைஞரே—எதிர்காலத்திற்காக அருமையான அஸ்திவாரத்தைப் போடுங்கள்
1 உங்கள் மனதில் முக்கியமாய் இருப்பது எது? நீங்கள் எதைப் பற்றி சிந்திக்கிறீர்கள்? தற்போதைய காரியங்களைப் பற்றியே அதிகமாய் யோசிக்கிறீர்களா? அல்லது எதிர்காலத்தையும் கடவுளின் வாக்குறுதிகளையும் பற்றி சிந்திக்கிறீர்களா? (மத். 6:24, 31-33; லூக். 8:14) கடவுளுடைய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயல்பட பலமான விசுவாசம் அவசியம்; ஆபிரகாம், மோசே போன்றவர்களின் உதாரணங்களிலிருந்து இது தெரிகிறது. (எபி. 11:8-10, 24-26) நீங்கள் எவ்வாறு அப்படிப்பட்ட விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு ‘எதிர்காலத்திற்காக அருமையான அஸ்திவாரத்தை’ போட முடியும்?—1 தீ. 6:19, NW.
2 யெகோவாவை தேடுங்கள்: குடும்பமாக சேர்ந்து ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுவது உங்கள் பழக்கம் என்றால் அது பாராட்டத்தக்கது. ஆனால், அப்படிப்பட்ட பழக்கத்தினால் விசுவாசம் தானாகவே பலப்பட்டுவிடும் என்று கற்பனை செய்துகொள்ளாதீர்கள். “தேவனை அறியும் அறிவை” கண்டடைவதற்கு நீங்கள்தான் யெகோவாவை தேட வேண்டும். (நீதி. 2:3-5; 1 நா. 28:9) இளம் அரசனாகிய யோசியா அதைத்தான் செய்தார். ஆவிக்குரிய விதத்தில் முன்னேற தடையாக இருந்த சூழ்நிலையில் அவர் வளர்ந்தபோதிலும், 15 வயதாக இருக்கையில் “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்”தார்.—2 நா. 34:3.
3 நீங்கள் எவ்வாறு யெகோவாவை தேடலாம்? நீங்கள் நம்புவதை கவனமாக ஆராய்ந்து பார்த்து, அதுதான் சத்தியம் என்று ‘உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக் கொள்வதன்’ மூலமாகும். (ரோ. 12:2, NW) உதாரணமாக, இரத்தத்தைப் பற்றி பைபிள் சொல்வதை உங்களால் விளக்க முடியுமா அல்லது கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா? ‘சத்தியத்தின் திருத்தமான அறிவை’ பெறுவது எதிர்காலத்திற்காக அருமையான அஸ்திவாரத்தை போடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.—1 தீ. 2:3, 4, NW.
4 யோசியா கடவுளை தேடியதால் நல்ல பலன்கள் கிடைத்தன. அவர் 20 வயதாவதற்குள்ளாகவே தேசத்திலிருந்து பொய் வணக்கத்தை அப்புறப்படுத்த தைரியமாக நடவடிக்கை எடுத்தார். (2 நா. 34:3-7) அதைப் போலவே, உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றமும் உங்கள் செயல்களில் வெளிப்படும். (1 தீ. 4:15) முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருந்தால் உங்களுடைய ஊழியத்தின் தரத்தில் முன்னேற்றத்தைக் காண முயலுங்கள். வெறுமனே பிரசுரங்களை அளிப்பதோடு திருப்தி அடைந்துவிடாதீர்கள். பைபிளை உபயோகிப்பது, ஜனங்களோடு நியாயவிவாதம் செய்வது, அக்கறை காண்பிப்போரை மீண்டும் சந்தித்து அவர்களது ஆர்வத்தை வளர்ப்பது போன்றவற்றை உங்கள் இலக்காக வையுங்கள். (ரோ. 12:7, 8) ஆவிக்குரிய விதத்தில் வளர இது உங்களுக்கு உதவும்.
5 மிகச் சிறந்ததை யெகோவாவிற்கு கொடுங்கள்: யெகோவாவிற்கு செய்திருக்கும் ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெறும்போது நீங்கள் தேவனுடைய நியமிக்கப்பட்ட ஊழியர் ஆகிறீர்கள். (2 கொ. 3:5, 6) அதற்கு பிறகு, யெகோவாவை முழுநேரமாக சேவிக்க உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயனியர் ஊழியம், பெத்தேல் சேவை, பயண ஊழியம் போன்றவை இதில் அடங்கும். மற்றொரு மொழியை கற்பது அல்லது தேவை அதிகமுள்ள இடத்தில் சேவிக்க செல்வது போன்றவை உங்கள் ஊழியத்தை விஸ்தரிப்பதற்கான மற்ற வழிகளாகும்.
6 அனைவராலுமே இந்த ஊழிய சிலாக்கியங்களில் பங்குகொள்ள முடியாது என்பதென்னவோ உண்மைதான். என்றாலும், நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை நாம் ஒவ்வொருவரும் யெகோவாவிற்கு கொடுக்கலாம். (மத். 22:37) நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் யெகோவாவை சேவிப்பதையே வாழ்க்கையின் மையமாக வையுங்கள். (சங். 16:5) அப்படி செய்தால், எதிர்காலத்திற்காக அருமையான அஸ்திவாரத்தைப் போடுவீர்கள்.
[கேள்விகள்]
1. கிறிஸ்தவ இளைஞர் ஏன் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
2. அரசனாகிய யோசியாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
3. இளம் கிறிஸ்தவர்கள் இன்று எவ்வாறு யெகோவாவை தேடலாம்?
4. முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் தங்கள் முன்னேற்றத்தை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
5. முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் ஊழியத்தை விஸ்தரிப்பதற்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?
6. நாம் அனைவருமே எதிர்காலத்திற்காக அருமையான அஸ்திவாரத்தை எப்படி போடலாம்?