பாட்டு 211
அறுப்பில் மகிழ்ச்சியுடன் பங்குகொள்ளுதல்
1. நாம்வாழ்வது அறுப்புக் காலம்.
இது ஒப்பில்லா சிலாக்கியம்.
“அறுவடைக்காரர்” தூதரே.
நமக்கும் இதில் பங்குண்டே.
கிறிஸ்துவே ஆரம்பித்துவைத்தார்,
“வயலில்” விதைவிதைத்தார்.
அறுப்புக்குப்பயிர் முற்றியது.
விளைச்சல் சேர்ப்போம் மகிழ்ந்து.
2. “களஞ்சியத்திலே,” “கோதுமை.”
தெளிவாய் தெரிந்த “களை.”
நம்மை தடைசெய்ய பார்க்கவே,
“அழுது” பற்கடிக்கவே.
சுறுசுறுப்பாய் தேவமக்கள்
நாளெல்லாம் உழைக்கிறார்கள்.
அறுவடை செம்மறி மக்களே.
உதவி செய்திடுவோமே.
3. தேவனில் அயலாரில் அன்பு
வேகத்தைக் கூட்டுகிறது.
கூட்டிச் சேர்த்தல் அவசரமே,
முடிவு நெருங்கியதே.
அறுப்புக் காலம், செயல்தேவை.
கற்போருக்குதவிதேவை.
ஊழியத்தில் மகிழ்ச்சி நாள்தோறும்.
புதியோர் அறியும்போதும்.
4. அறுப்புக்கெஜமான்கிறிஸ்துவே,
கதிர் முற்றகாண்கிறாரே.
விளைச்சல்திரண்டவயல்கள்!
கற்பிக்கவேண்டியதிரள்!
உடன் ஊழியராய் பங்கேற்கிறோம்.
மிக்க மகிழ்ச்சி காண்கிறோம்.
சுறுசுறுப்பாயிருக்க வேண்டும்.
நேர்மையாயிருக்கவேண்டும்.