உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
    ராஜ்ய ஊழியம்—2001 | செப்டம்பர்
    • ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை

      செப்டம்பர் 10-⁠ல் துவங்கும் வாரம்

      பாட்டு 86

      10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

      13 நிமி:சபையின் தேவைகள்.

      22 நிமி:“உங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுகிறீர்களா?”a முதல் மூன்று பாராக்களை சபையாருடன் கலந்தாலோசித்த பின்பு, இரண்டு சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை​—⁠ஒன்றை செப்டம்பர் 8 விழித்தெழு!-வை பயன்படுத்தியும் மற்றொன்றை செப்டம்பர் 15 காவற்கோபுரத்தை பயன்படுத்தியும்​—⁠நடித்துக் காட்டுங்கள். 4-⁠ம் பாராவை கலந்தாலோசித்த பின்பு அறிவு புத்தகத்தை பயன்படுத்தி, சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிரசங்கத்தை நடித்துக் காட்டுங்கள்.

      பாட்டு 124, முடிவு ஜெபம்.

      செப்டம்பர் 17-⁠ல் துவங்கும் வாரம்

      பாட்டு 92

      15 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “அது இன்டெக்ஸில் இருக்கிறது.” படைப்பு புத்தகத்திற்கான பிரசங்கங்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என காட்டுங்கள்.

      15 நிமி:கடந்த வருடத்தில் நாம் எதை சாதித்தோம்? ஊழிய கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. 2001 ஊழிய ஆண்டின் சபை அறிக்கையை சிறப்பித்துக் காட்டுங்கள். சிறந்த சாதனைகளுக்காக அனைவரையும் பாராட்டுங்கள். கூட்டங்களுக்கு வருவது, வெளி ஊழியத்திற்கு தவறாமல் செல்வது, வேதப்படிப்பு நடத்துவது போன்றவற்றில் சபை எதை சாதித்துள்ளது என்பதை முக்கியப்படுத்திக் காட்டுங்கள். முன்னேறுவதற்கு நடைமுறை ஆலோசனைகளையும் கூறுங்கள். வருகிற ஆண்டில் எட்டக்கூடிய இலக்குகளை வையுங்கள்.

      15 நிமி:கேள்விப் பெட்டி. பேச்சு. சபையின் வெளி ஊழிய கூட்டத்திற்கான வாராந்தர அட்டவணையை மறுபார்வை செய்யவும். இக்கூட்டங்களில் கலந்துகொள்கிற அனைவரும் பலன்தரத்தக்க கலந்தாலோசிப்புக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை விளக்கவும். இந்த ஊழிய ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும்படி சபையாரை உற்சாகப்படுத்தவும்.

      பாட்டு 129, முடிவு ஜெபம்.

      செப்டம்பர் 24-⁠ல் துவங்கும் வாரம்

      பாட்டு 97

      15 நிமி:சபை அறிவிப்புகள். “பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது” என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி இரண்டு பத்திரிகை பிரசங்கங்களை​—⁠ஒன்றை செப்டம்பர் 8 விழித்தெழு!-வை பயன்படுத்தி, மற்றொன்றை அக்டோபர் 1 காவற்கோபுரத்தை பயன்படுத்தி⁠—⁠நடித்துக் காட்டுங்கள்.

      30 நிமி:கடவுளை நேசியுங்கள்​—⁠உலக காரியங்களை அல்ல. (1 யோ. 2:15-17, NW) கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரலை மறுபார்வை செய்யும் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அங்கு கற்ற முக்கிய குறிப்புகளையும் தனிப்பட்ட விதமாக அல்லது குடும்பமாக அதை அவர்கள் எவ்வாறு பொருத்த முடிந்தது என்பதையும் சொல்லும்படி பிரஸ்தாபிகளை கேளுங்கள். (அப்பகுதிகளை முன்கூட்டியே நியமிக்கலாம்) நிகழ்ச்சிநிரலின் பின்வரும் பகுதிகளை சிறப்பித்துக் காட்டுங்கள்: (1) “கடவுள் மீதுள்ள அன்பு ஊழியத்தில் நம்மை தூண்டுவிக்கிறது.” கூச்ச சுபாவம், தாழ்வு மனப்பான்மை, மனித பயம் போன்ற எதிர்மறையான எண்ணங்களை சமாளிக்க இந்த அன்பு உதவுகிறது. (2) “யெகோவாவை நேசிப்பவர்கள் தீமையை வெறுக்கிறார்கள்.” (w-TL99 10/1 28-31) கடவுளுடன் உறவை வைத்திருப்பது, அவர் வெறுக்கும் காரியங்களை​—⁠வெளிப்படையான தவறுகளை மட்டுமல்ல இரகசியமான தவறுகளையும்​—⁠நாம் வெறுப்பதை பொறுத்து இருக்கிறது. (3) “அன்பின் மேம்பட்ட வழியைப் பின்தொடருங்கள்.” (w-TL92 10/15 27-30) 1 கொரிந்தியர் 13:4-8 வசனங்கள், நாம் ஏன் மற்றவர்களின் வரம்புகளை புரிந்துகொண்டு பொறுமையுடன் நடக்கிறோம், சுயநலத்தையும் போட்டியையும் தவிர்க்கிறோம், தீங்கு விளைவிக்கும் வீண்பேச்சை பரப்புவதில்லை, கடவுளுடைய அமைப்பில் உண்மையாய் நிலைத்திருக்கிறோம் என்பதையெல்லாம் காட்டுகின்றன. (4) “உலக காரியங்கள்​—⁠அவற்றை நாம் எப்படி கருதுகிறோம்?” நாம் உலக காரியங்களை நேசிக்கவோ, மாம்ச இச்சைக்குள் வீழ்ந்துவிடவோ கண்களின் இச்சையால் தவறாக வழிநடத்தப்படவோ அல்லது ஜீவனத்தின் பெருமையை வெளிக்காட்டவோ கூடாது. (5) “உலகின் பாகமில்லாதிருப்பது நம்மை பாதுகாக்கிறது.” சில நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், செயல்கள் எவ்வாறு நம்மை கடவுளுக்கு ஏற்கத்தகாதவர்களாக ஆக்கலாம் என 2 கொரிந்தியர் 6:14-17 வசனங்கள் காட்டுகின்றன. பிசாசு உபயோகிக்கும் படுகுழிகளை கண்டுணர்ந்து அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். (6) “யெகோவாவை நேசிப்பவர்களுக்கு கடவுளின் வாக்குறுதிகள்.” (w-TL87 11/1 5-6) யெகோவாவின் ஆசீர்வாதங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கூட்டுகின்றன, ஆவிக்குரிய விதத்தில் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன.​—⁠1 தீ. 6:17-19.

      பாட்டு 133, முடிவு ஜெபம்

      அக்டோபர் 1-⁠ல் துவங்கும் வாரம்

      பாட்டு 106

      10 நிமி:சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாத ஊழிய அறிக்கையை போடும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.

      15 நிமி:பள்ளியில் நான் இன்னும் நன்றாக படிப்பது எப்படி? ஒரு மூப்பரும் அவருடைய மனைவியுமோ ஓர் உதவி ஊழியரும் அவருடைய மனைவியுமோ பள்ளியில் படிக்கும் தங்களுடைய பிள்ளையிடம் பேசுகிறார்கள். பள்ளிப்பாடங்களில் பிள்ளை பின்தங்கிய நிலையில் இருப்பதை எண்ணி அவர்கள் கவலைப்படுகிறார்கள். இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகத்தில் 18-⁠ம் அதிகாரத்திலுள்ள ஆலோசனையை மறுபார்வை செய்து, படிப்பில் பிள்ளை முன்னேறுவதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை கலந்தாலோசிக்கிறார்கள். பரிசுத்த சேவையில் ஈடுபடுவதற்காக, எல்லா திறமைகளையும் பயன்படுத்தி சிறந்த அடிப்படை கல்வியைப் பெற வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர் வலியுறுத்தி காட்டுகிறார்கள்.

      20 நிமி:“பிரசங்க வேலைக்கு அது ஒரு முட்டுக்கட்டையா?”b ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்க உதவும் காரியங்களுக்கு முன்னுரிமை அளித்து, உலகப்பிரகாரமான வேலையில் சமநிலையைக் காத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். ஆவிக்குரிய தேவைகளுக்கு தடை ஏற்படாமல் தங்களுடைய குடும்பத்திற்கு வேண்டிய பொருளாதார காரியங்களை எப்படி அளிக்கிறார்கள் என்பதை சொல்லும்படி குடும்பத் தலைவர்கள் சிலரை கேளுங்கள்.

      பாட்டு 137, முடிவு ஜெபம்.

  • அது இன்டெக்ஸில் இருக்கிறது
    ராஜ்ய ஊழியம்—2001 | செப்டம்பர்
    • அது இன்டெக்ஸில் இருக்கிறது

      எது? ஊழியத்தில் பயன்படுத்துவதற்கான மாதிரி பிரசங்கத்தை கண்டுபிடிப்பதற்கு உதவும் ரெஃபரன்ஸ். பொருளின் அடிப்படையில் அல்லது பிரசுரத்தின் அடிப்படையில் அநேக அறிமுகங்களையும் பிரசங்கங்களையும் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலிடுகிறது. ஊழியத்தில் எதிர்ப்படும் மறுப்புகளை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு உதவியையும் அது தருகிறது. முக்கிய தலைப்புகளும் உப தலைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றிற்குக் கீழே வெளி ஊழியத்திற்கு மிகவும் பயனுள்ள ஆலோசனைகளை ஏராளமாக காணலாம்.

      Introductions (அறிமுகங்கள்)

      List by Subject

      Objections (மறுப்புகள்)

      Common Objections

      Presentations (பிரசங்கங்கள்)

      List by Publication

      List by Subject

      Return Visits (மறுசந்திப்புகள்)

      List by Publication

      List by Subject

  • மே ஊழிய அறிக்கை
    ராஜ்ய ஊழியம்—2001 | செப்டம்பர்
    • மே ஊழிய அறிக்கை

      சரா. சரா. சரா. சரா.

      எண்ணிக்கை: மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.

      விசேஷ பய. 7 124.6 32.7 54.4 5.3

      பயனியர்கள் 966 58.7 20.0 21.7 3.7

      துணைப் பய. 693 53.3 18.2 11.1 1.6

      பிரஸ். 18,965 7.9 3.1 2.3 0.4

      மொத்தம் 20,631 முழுக்காட்டுதல்: 45

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்